இந்தியா

1.புரி ஜகன்னாதர் கோவிலில் ஜனவரி 1 முதல் பக்தர்கள் மொபைல் கொண்டு வருவதற்கு தடை விதித்து கோவில் நிர்வாகத்தினர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளனர்.
2.பிரதமர் நரேந்திர மோடி இந்த ஆண்டின் இறுதியை நாட்டு மக்களுக்கு உரையாற்றும் மன் கி பாத் நிகழ்ச்சியுடன் நிறைவு செய்யவுள்ளார்.பிரதமர் மோடி பேசும் 39-வது மன் கி பாத் நிகழ்ச்சி வானொலியில் இன்று ஒலிபரப்பாவது குறிப்பிடத்தக்கது.
3.ஐதராபாத் நகரில் எந்த தெருவிலாவது பிச்சைக்காரர்கள் இருப்பது பற்றி தகவல் கொடுத்தால் ரூ.500 பரிசு வழங்கப்படும் என்று சிறைத்துறை டி.ஜி.பி. வி.கே.சிங் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.


இன்றைய தினம்

1.1600 – பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி ஆரம்பிக்கபட்டது.
2.1984 – ராஜீவ் காந்தி இந்தியப் பிரதமரானார்.

 

–தென்னகம்.காம் செய்தி குழு