தமிழகம்

1.வாக்காளர் பட்டியலில் உள்ள விவரங்களை வாக்காளர்களே சரிபார்த்து திருத்திக் கொள்ளும் முறை,  (செப். 1) முதல் நடைமுறைக்கு வருகிறது. வாக்காளர் பட்டியலை முழுமையாக பிழையில்லாமல் வெளியிடவே இந்தத் திட்டம் அமலுக்கு வருவதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.

2.பல்வேறு வகையிலான தொழில் நிறுவனங்களுக்கு உதவுவதற்காக மேம்பட்ட உற்பத்தி தொழில்நுட்ப வளர்ச்சி மையம் சென்னை ஐஐடி-யில் தொடங்கப்பட்டுள்ளது.


இந்தியா

1.அஸ்ஸாமில் தேசிய குடிமக்கள் பதிவேட்டின் (என்ஆர்சி) இறுதிப் பட்டியல் வெளியிடப்படுகிறது. இதன் காரணமாக, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் காவல் துறையினர் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

2.ககோலி கோஷ் (வேளாண் துறை), அம்பர் துபே (விமானப் போக்குவரத்துத் துறை), அருண் கோயல் (வர்த்தகத் துறை), ராஜீவ் சக்சேனா (பொருளாதார விவகாரங்கள் துறை), சுஜித் குமார் (சுற்றுச்சூழல், வனத்துறை), செளரவ் மிஸ்ரா (நிதிச் சேவைகள் துறை), தினேஷ் தயானந்த் ஜக்தலே (புதிய, புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை) சுமன் பிரசாத் சிங் (சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை), பூஷண் குமார் (கப்பல் போக்குவரத்துத் துறை) ஆகியோர் புதிய இணைச் செயலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

3.பிரதமர் நரேந்திர மோடியின் முதன்மைச் செயலராக பணியாற்றிய ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி நிருபேந்திர மிஸ்ரா பதவி விலகுவதாக தெரிவித்துள்ளார்.


வர்த்தகம்

1.கடந்த ஏப்ரல்-ஜூன் வரையிலான காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாகக் குறைந்துள்ளது. இது கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைவாகும்.இதற்கு முன்பு, கடந்த 2012-13-இல் ஏப்ரல்-ஜூன் வரையிலான காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 4.9 சதவீதமாக இருந்தது.

2.நாட்டின் நிதிப் பற்றாக்குறை ஜூலை இறுதி நிலவரப்படி ரூ.5.47 லட்சம் கோடியை எட்டியுள்ளது.
இதுகுறித்து தலைமை கணக்கு கட்டுப்பாட்டாளர் (சிஜிஏ) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:வரவுக்கும் மற்றும் செலவுக்கும் உள்ள இடைவெளியானது (நிதிப் பற்றாக்குறை) சென்ற ஜூலை மாத இறுதி நிலவரப்படி ரூ.5,47,605 கோடியை எட்டியுள்ளது. நடப்பு 2019-20-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் மதிப்பீட்டில் இது 77.8 சதவீதம்.
கடந்த 2018-19 நிதியாண்டின் இதே கால அளவில் நிதிப் பற்றாக்குறை பட்ஜெட் இலக்கில் 86.5 சதவீதமாக காணப்பட்டது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3.பஞ்சாப் நேஷனல் வங்கியுடன் யுனைடெட் பாங்க் ஆஃப் இந்தியா, ஓரியண்டல் பாங்க் ஆஃப் காமர்ஸ் ஆகியவை இணைக்கப்படுகின்றன.
கனரா வங்கியுடன் சிண்டிகேட் வங்கியும், இந்தியன் வங்கியுடன் அலாகாபாத் வங்கியும் இணைக்கப்படுகின்றன.
இதேபோல், யூனியன் பாங்க் ஆஃப் இந்தியாவுடன் ஆந்திரா வங்கியும், கார்ப்பரேஷன் வங்கியும் இணைக்கப்படுகின்றன.வங்கிகளை ஒன்றிணைப்பதால், கடந்த 2017-ஆம் ஆண்டில் இருந்த 27 வங்கிகள் தற்போது 12 வங்கிகளாகக் குறையும்.

வங்கிகள் ஒருங்கிணைப்புக்குப் பிறகு, வங்கிகள் வாரியத்துக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கப்படும். வங்கிகளின் பொது மேலாளர் பதவிக்கு மேலான பொறுப்புகளை வகிக்கும் அலுவலர்களின் பணித்திறனை மதிப்பிடுவதற்கு வங்கிகள் வாரியத்துக்கு அதிகாரம் வழங்கப்படும். இதுதவிர, அலுவல் தேவைக்கு ஏற்ப தலைமை பொது மேலாளரை நியமிப்பதற்கு வாரியத்துக்கு அதிகாரம் வழங்கப்படும்.


உலகம்

1.ஐரோப்பிய யூனியன் தலைவர் டேவிட் மரியா சசோலியை பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் சந்தித்து பேசினார்.

2.ஹாங்காங்கில் ஜனநாயக ஆதரவுப் போராட்டக் குழுக்களின் தலைவர்கள் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

3.விண்வெளியில் உள்ள தங்களது செயற்கைக்கோள்களைப் பாதுகாப்பதற்காக, விண்வெளி போர்ப் படைப் பிரிவை அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.


விளையாட்டு

1.ஐஎஸ்எஸ்எப் உலக துப்பாக்கி சுடும் போட்டியில் ஆடவர் பிரிவில் இந்தியாவின் அபிஷேக் வர்மா தங்கப் பதக்கத்தையும், செளரவ் செளதரி வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.


ன்றைய தினம்

  • மலேசிய விடுதலை தினம்(1957)
  • கிர்கிஸ்தான் விடுதலை தினம்(1991)
  • வேல்ஸ் இளவரசி டயானா இறந்த தினம்(1997)
  • வடகொரியா தனது முதலாவது செயற்கைகோளை ஏவியது(1998)

– தென்னகம்.காம் செய்தி குழு