Current Affairs – 31 August 2018
தமிழகம்
1.பதிவுத் துறை ஆவணப் பதிவின் ஒவ்வொரு நிலைகள் தொடர்பாக, பொதுமக்களுக்கு செல்லிடப் பேசி வழியே தகவல் அளிக்கும் வசதி வரும் செப். 3-ஆம் தேதி முதல் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
2.சென்னை மாநகராட்சியின் லஞ்ச ஒழிப்புப் பிரிவில் பணியாற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரையும் இடமாற்றம் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியா
1.மக்களவை மற்றும் அனைத்து சட்டப் பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பான மத்திய அரசின் திட்டத்துக்கு சட்ட ஆணையம் ஒப்புதல் தெரிவித்துள்ளது.
வர்த்தகம்
1.ரிசர்வ் வங்கி, ‘சைபர் கிரைம்’ எனப்படும், கணினி சார்ந்த குற்றங்களால் பாதிக்கப்படும் வங்கி வாடிக்கையாளர்களின் டிபாசிட்டை பாதுகாப்பதற்கான விதிமுறைகளை உருவாக்கி உள்ளது.
2.தமிழகத்தில், ஆறு ஆண்டுகளில், 3,000 புதிய தொழில்முனைவோர் உருவாகியுள்ளதாக, தொழில் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
3.ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் நிறுவன நிர்வாகக்குழு இயக்குநராக சந்தா கோச்சாரை மீண்டும் நியமிப்பதற்கு ஐசிஐசிஐ வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.
உலகம்
1.இரு நாடுகளின் பாதுகாப்புத் துறை அமைச்சகங்கள், இரு தரப்பு ராணுவங்களின் பிராந்திய பிரிவுகள் இடையே தொலைபேசி தொடர்பை ஏற்படுத்துவது குறித்து இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.
2.காதியின் மகத்துவத்தை வலியுறுத்தி ராட்டை என்ற பெயரில் மகாத்மா காந்தி எழுதிய தேதி குறிப்பிடாத கடிதத்தை அமெரிக்க இணையதளம் வாயிலாக ஏலம் விட திட்டமிடப்பட்டுள்ளது.
விளையாட்டு
1.ஆசியப்போட்டி தடகளத்தில் 1500 மீ. ஓட்டத்தில் இந்தியாவின் ஜின்ஸன் ஜான்சன் தங்கம் வென்றார். குண்டு எறிதலில் சீமா புனியாவும், மகளிர் 1500 மீ ஓட்டத்தில் சித்ரா உன்னிகிருஷ்ணன் வெண்கலம் வென்றனர்.
ஆசிய விளையாட்டுப் போட்டியின் 4*400மீ தொடர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய மகளிர் அணி தங்கப் பதக்கமும், ஆடவர் அணி வெள்ளிப் பதக்கமும் வென்றது.
2.உலக யூத் குத்துச்சண்டை சாம்பியன் போட்டியில் 2 ஆவது முறையா தங்கம் வென்று சாதனை படைத்தார் இந்தியாவின் நிது. ஹரியாணாவைச் சேர்ந்த நடப்பு சாம்பியன் நிது 48 கிலோ எடைப்பிரிவு இறுதிச் சுற்றில் தாய்லாந்தின் நில்லாடா மீக்கூனை வீழ்த்தி தங்கம் வென்றார். கடந்த ஆண்டு குவஹாட்டியில் நடந்த உலக யூத் குத்துச்சண்டை போட்டியிலும் நிது தங்கம் வென்றிருந்தார்.
இன்றைய தினம்
- மலேசிய விடுதலை தினம்(1957)
- கிர்கிஸ்தான் விடுதலை தினம்(1991)
- வேல்ஸ் இளவரசி டயானா இறந்த தினம்(1997)
- வடகொரியா தனது முதலாவது செயற்கைகோளை ஏவியது(1998)
- தென்னகம்.காம் செய்தி குழு