தமிழகம்

1.குடிமராமத்துத் திட்டப் பணிகளுக்கு மூன்றாம் கட்டமாக ரூ.500 கோடி ஒதுக்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.


இந்தியா

1.நாடு முழுவதும் வெங்காயம் விலை கடுமையாக அதிகரித்து வரும் நிலையில், வெங்காயம் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்தது.

2.இந்தியாவில் 6 லட்சத்துக்கும் அதிகமான முறைப்படுத்தப்படாத ஆளில்லா விமானங்கள் உள்ளன என்று மத்திய அரசின் அமைப்புகள் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

3.ஜம்மு-காஷ்மீரில் அக்டோபர் 24-ஆம் தேதி வட்டார வளர்ச்சிக் கவுன்சில் தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.


வர்த்தகம்

1.லட்சுமி விலாஸ் வங்கிக்கு எதிராக, துரித தடுப்பு நடவடிக்கையை துவங்கி உள்ளது, ரிசர்வ் வங்கி. கடந்த இரண்டு ஆண்டுகளாக, அதிகளவிலான வாராக்கடன் மற்றும் இடர்ப்பாடுகளை எதிர்கொள்வதற்கு போதுமான நிதியாதாரம் இல்லாதது ஆகிய காரணங்களால், வங்கி மீது இந்த நடவடிக்கையை, ரிசர்வ் வங்கி எடுத்துள்ளது.

2.இந்தியாவில் பெட்ரோகெமிக்கல் உள்ளிட்ட துறைகளில் ரூ.7 லட்சம் கோடி வரை முதலீடு செய்ய இருப்பதாக சவூதி அரேபியா கூறியுள்ளது.


உலகம்

1.ஆஸ்திரிய நாடாளுமன்றத்துக்கு ஞாயிற்றுக்கிழமை முன்கூட்டியே தேர்தல் நடைபெற்றது. அந்த நாட்டில் கடந்த 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலுக்குப் பின் செபாஸ்டியன் கர்ஸ் தலைமையில் அமைந்த அரசு, கூட்டணி முறிவால் கவிழந்ததைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தின் ஆட்சிக் காலம் நிறைவடைவதற்கு முன்னரே இந்தத் தேர்தல் நடைபெற்றுள்ளது.

2.பிரிட்டன் நாடாளுமன்றம் முடக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக அந்த நாட்டு அரசியிடம் பிரதமர் போரிஸ் ஜான்ஸன் மன்னிப்பு கேட்டார்.


விளையாட்டு

1.பெல்ஜியத்தின் கெண்ட் நகரில் நடைபெற்ற சர்வதேச வாள்வீச்சு (ஃபென்சிங்) போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார் சென்னை வீராங்கனை பவானி தேவி.

2.கோவை, செட்டிபாளையம் பகுதியில் நடந்த ஜே.கே.டயர் 22 ஆவது தேசிய கார் பந்தயத்தில் சென்னை வீரர் விஷ்ணு பிரசாத் முதலிடம் பிடித்து கோப்பையைக் கைப்பற்றினார்.

3.தோஹாவில் நடைபெற்று வரும் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 100 மீ ஓட்டத்தில் 9.76 விநாடிகளில் கடந்து அதிவேக வீரர் என்ற சிறப்பை அமெரிக்காவின் கிறிஸ்டியன் கோல்மேன் பெற்றுள்ளார்.


ன்றைய தினம்

  • சர்வதேச மொழிபெயர்ப்பு தினம்
  • போட்ஸ்வானா விடுதலை தினம்(1966)
  • தமிழ் விக்கிப்பீடியா ஆரம்பிக்கப்பட்டது(2003)
  • உலகின் முதலாவது நீர்மின் உற்பத்தி நிலையம் அமெரிக்காவில் அமைக்கப்பட்டது(1882)
  • பாகிஸ்தான், ஏமன் ஆகியன ஐநாவில் இணைந்தன(1947)

– தென்னகம்.காம் செய்தி குழு