Current Affairs – 30 September 2018
தமிழகம்
1.நெய்வேலியில் உள்ள என்எல்சி இந்தியா நிறுவனத்தின் 36-ஆவது தலைவராக ராக்கேஷ்குமார் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றார்.
2.பழகுநர், ஓட்டுநர் உரிமங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து கட்டணத்தையும் இணையம் வழியாகவே செலுத்தலாம். இந்தப் புதிய நடைமுறை வரும் திங்கள்கிழமை முதல் நடைமுறைக்கு வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
3.தமிழகத்தில் 31 மாவட்டங்களில் தொடர்ச்சியாக நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் சென்னையில் இன்று நிறைவு பெறுகின்றன. மேலும், நூற்றாண்டு நிறைவு விழாவுடன், தமிழ்நாடு 50-ஆம் ஆண்டு பொன் விழாவும் நடக்கவுள்ளது.
இந்தியா
1.அரசியல் கட்சிகளின் தேர்தல் செலவினங்களுக்கு உச்சவரம்பு நிர்ணயிப்பது குறித்து தேர்தல் ஆணையம் பரிசீலித்து வருகிறது.
2.உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவில் நான்காம் ஆண்டு இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா (ஐஐஎஸ்எஃப்) வரும் அக்டோபர் 5 முதல் 8-ஆம் தேதி வரை நான்கு நாள்கள் நடைபெறுகிறது.
3.காஷ்மீர் நகர்ப்புற உள்ளாட்சி பதவிகளுக்கான முதல் கட்ட தேர்தலில் 69 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
4.வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்தின் மறுகட்டமைப்புக்காக சிறப்பு வரி விதிப்பது குறித்து ஆய்வு செய்ய ஏழு அமைச்சர்கள் கொண்ட குழு அமைத்து மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி உத்தரவிட்டுள்ளார்.
வர்த்தகம்
1.மத்திய அரசு, 28 பால் பொருட்களின் ஏற்றுமதிக்கு அளித்து வரும் சலுகையை, மேலும்
உயர்த்தியுள்ளது.
2.நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு செப்டம்பர் 21-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 130 கோடி டாலர் (ரூ.9,000 கோடி) அதிகரித்துள்ளது.
3.பொதுத் துறை வங்கிகள் சென்ற ஆகஸ்ட் மாதத்தில் வழங்கிய உணவு சாரா கடன் 12.4 சதவீதம் அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
4.பொதுத் துறையைச் சேர்ந்த பேங்க் ஆஃப் பரோடா, தேனா வங்கியுடனான இணைப்புக்கு விஜயா வங்கி தனது முதல்கட்ட ஒப்புதலை தெரிவித்தது.
உலகம்
1.சர்ச்சைகள் மற்றும் பாலியல் புகார்கள் காரணமாக, இந்த ஆண்டின் இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்குவதை நிறுத்திவைத்துள்ளதாக ஸ்வீடன் அகாடமி அறிவித்துள்ளது.
2.ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து அளிப்பதற்கு அமெரிக்கா மீண்டும் ஆதரவு தெரிவித்துள்ளது.
3.உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட எஃப்டிசி-2000ஜி போர் விமானத்தை சீனா முதல் முறையாக பறக்கச் செய்தது.
4.உஸ்பெகிஸ்தான் அதிபர் ஷவ்கத் மிர்ஸியோயெவ் 2 நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வருகிறார்.
விளையாட்டு
1.ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் முதல் போட்டியில் அட்லெடிகோ கொல்கத்தா அணியை கேரள பிளாஸ்டர்ஸ் அணி 2-0 என்ற கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது.
இன்றைய தினம்
- சர்வதேச மொழிபெயர்ப்பு தினம்
- போட்ஸ்வானா விடுதலை தினம்(1966)
- தமிழ் விக்கிப்பீடியா ஆரம்பிக்கப்பட்டது(2003)
- உலகின் முதலாவது நீர்மின் உற்பத்தி நிலையம் அமெரிக்காவில் அமைக்கப்பட்டது(1882)
- பாகிஸ்தான், ஏமன் ஆகியன ஐநாவில் இணைந்தன(1947)
- தென்னகம்.காம் செய்தி குழு