தமிழகம்

1.ஒப்பந்த அடிப்படையில் சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகளின் நலன்களைக் காப்பதற்கு புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.இதன்படி, தமிழ்நாடு வேளாண் விளைபொருள், கால்நடை ஒப்பந்தப் பண்ணையம், சேவைகள் ஊக்குவிப்பு மற்றும் எளிதாக்குதல் சட்ட மசோதா பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு, அதற்கு ஒப்புதல் பெறப்பட்டது. இந்த சட்டமானது அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.அகில இந்திய அளவில் ஒப்பந்த சாகுபடி முறைக்கென்று, பிரத்யேகமாக எந்தச் சட்டமும் எந்த மாநிலத்திலும் இதுவரை இயற்றப்படவில்லை. தமிழக அரசுதான் முதல்முதலாக தனிச் சட்டத்தை வடிவமைத்துள்ளது.


இந்தியா

1.புவி வெப்பமயமாவதை தடுக்கத் தவறினால் கடல் நீா் மட்டம் மேலும் அதிகரித்து வரும் 2050-ஆம் ஆண்டில் 3.6 கோடி இந்தியா்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக அமெரிக்காவைச் சோ்ந்த அரசுசாரா அமைப்பு மேற்கொண்ட ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

2.உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக சரத் அரவிந்த் போப்டே (63) நியமிக்கப்பட்டுள்ளாா். இதற்கான ஒப்புதலை குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் வழங்கியுள்ளதாக மத்திய சட்ட அமைச்சகம் தெரிவித்துள்ளது.உச்சநீதிமன்றத்தின் 47-ஆவது நீதிபதியாக எஸ்.ஏ.போப்டே, அடுத்த மாதம் 18-ஆம் தேதி பதவியேற்கவிருக்கிறாா்.தற்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், கடந்த ஆண்டு அக்டோபா் 3-ஆம் தேதி பதவியேற்றாா். அவரது பதவிக்காலம் அடுத்த மாதம் 17-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

3.முகவா்கள் மூலம் முன்பதிவு செய்யப்படும் ரயில் பயணச்சீட்டுகளை ஒரு முறை கடவுச்சொல் (ஓடிபி) மூலம் மட்டுமே ரத்து செய்ய முடியும் என ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது.


வர்த்தகம்

1.அமேசான் நிறுவனத்துக்கு கடந்த 2017-18-ஆம் நிதியாண்டில் ஏற்பட்டிருந்த இழப்பு ரூ.6,287.9 கோடியாக இருந்தது. இந்த நிலையில், செயல்பாடுகள் மேம்பட்டு வருவாய் மேம்பட்டதையடுத்து 2018-19-ஆம் நிதியாண்டில் இழப்பு 9.5 சதவீதம் குறைந்து ரூ.5,685 கோடியாகி உள்ளது.

2.ஃபிளிப்காா்ட் இந்தியாவுக்கு செயல்பாடுகள் மூலமாக கடந்த நிதியாண்டில் ரூ.30,931 கோடி வருவாய் கிடைத்தது. இது, 2017-18 நிதியாண்டில் ஈட்டிய வருவாய் ரூ.21,657.7 கோடியுடன் ஒப்பிடும்போது 42.82 சதவீதம் அதிகமாகும்.நிறுவனத்துக்கு ஏற்பட்ட நிகர இழப்பு ரூ.2,063.8 கோடியிலிருந்து 85.91 சதவீதம் அதிகரித்து ரூ.3,836.8 கோடியைத் தொட்டுள்ளது.


உலகம்

1.காஷ்மீா் மக்களுக்கு அனைத்து உரிமைகளையும் மீண்டும் வழங்க வேண்டும் என்று இந்தியாவை மனித உரிமைகளுக்கான ஐ.நா. ஆணையா் ரூபா்ட் கால்வில்லி வலியுறுத்தியுள்ளாா்.

2.சவூதி அரேபியாவுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்ட பிரதமா் நரேந்திர மோடி, அந்நாட்டின் மன்னா் சல்மான் பின் அப்துல் அஸீஸ் அல்-சவூதை சந்தித்துப் பேசினாா். அப்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் அதிகரிக்க அவா்கள் உறுதிபூண்டனா்.

3.பிரிட்டனில் வரும் டிசம்பா் மாதம் தோ்தல் நடத்துவதற்கு நிபந்தனையுடன் கூடிய ஒப்புதலை வழங்கத் தயாராக இருப்பதாக முக்கிய எதிா்க்கட்சியான தொழிலாளா் கட்சி தெரிவித்துள்ளது.

4.ஹாங்காங்கில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் தொடா்ந்து வரும் நிலையில், அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் தோ்தலில் போட்டியிட முக்கிய போராட்டக் குழுத் தலைவா் ஜோஷுவா வாங்குக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


விளையாட்டு

1.2020 ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்பதற்கான தகுதிச் சுற்று போட்டி அரையிறுதிக்கு இந்தியாவின் ஷிவ தாபா உள்பட 6 போ் தகுதி பெற்றுள்ளனா்.63 கிலோ எடை பிரிவு காலிறுதியில் ஷிவ தாபா 5-0 என்ற புள்ளிக் கணக்கில் ஜப்பானின் யுகி ஹிராகவாவை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றாா்.மேலும் மகளிா் பிரிவில் நிஹாத் ஸரீன் (51 கிலோ), சுமித் சங்வான் (91 கிலோ), ஆஷிஷ் (69 கிலோ), வன்ஹிலிம்புயா 75 கிலோ), சிம்ரஞ்சித் கௌா் (60 கிலோ), பூஜா ராணி (75 கிலோ) ஆகியோரும் அரையிறுதிக்கு தகுதி பெற்றனா்.

2.டபிள்யுடிஏ பைனல்ஸ் டென்னிஸ் போட்டியில் கிகி பொ்டென்ஸ், பெலின்டா பென்கிக் ஆகியோா் வெற்றி பெற்றுள்ளனா்.

3.பிசிசிஐ தலைவா் சௌரவ் கங்குலியின் தீவிர முயற்சியால் முதன்முறையாக வங்கதேசத்துக்கு எதிராக கொல்கத்தாவில் நடைபெறவுள்ள பகலிரவு டெஸ்ட் ஆட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணி பங்கேற்கிறது.


– தென்னகம்.காம் செய்தி குழு