தமிழகம்

1.தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்த முறைகேடு வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை இடைக்கால தடை விதித்தது.

2.வடகிழக்குப் பருவமழை நவம்பர் 1 -ஆம் தேதி தொடங்குவதற்கான சாதகமான சூழல் நிலவுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

3.துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் (இபிஎஸ்) உள்பட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்க கோரும் விவகாரத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில்  நடைபெறுகிறது.


இந்தியா

1.சென்னை அயனாவரம், இணைப்புப் பெட்டி தொழிற்சாலையில் (ஐ.சி.எஃப்.) தயாரிக்கப்பட்டுள்ள ரயில்-18 அதிவிரைவு நவீன ரயிலை இந்திய ரயில்வே துறையிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி, ஐசிஎஃப் அருங்காட்சியகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

2.அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்துக்கு உரிமை கோருவது தொடர்பான வழக்கை அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்துக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.


வர்த்தகம்

1.‘ஜிம் – 2’ என்ற இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், எம்.எஸ்.எம்.இ., துறையில் முதலீடுகளை பெற, மாவட்ட அளவில், 100 கோடி முதல், 3,000 கோடி ரூபாய் வரை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக, தொழில் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

2.இந்தியாவின் சர்க்கரை உற்பத்தி நடப்பு சந்தைப் பருவத்தில் 3.15 கோடி டன்னாக குறையும் என இந்திய சர்க்கரை ஆலைககள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.


உலகம்

1.அதிவிரைவு ரயில், கடற்படை ஒத்துழைப்பு, இருநாட்டு வெளியுறவு, பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டாக சந்தித்துப் பேச்சு (2 பிளஸ் 2) நடத்துவது உள்ளிட்ட 6 முக்கிய ஒப்பந்தங்கள் இந்தியா-ஜப்பான் இடையே கையெழுத்தாயின.

2.இலங்கையின் புதிய பிரதமராக மஹிந்த ராஜபட்ச திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார். மற்ற அமைச்சர்கள் விரைவில் பதவியேற்கவுள்ளனர்.

3.பிரேசிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அதிபர் தேர்தலில், சர்ச்சைக்குரிய வலதுசாரி தலைவர் ஜெயிர் பொல்சொனாரோ (63) வெற்றி பெற்றுள்ளார்.


விளையாட்டு

1.ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி இறுதி ஆட்டம் கடும் மழையால் பாதிக்கப்பட்ட நிலையில் நடப்பு சாம்பியன் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் கூட்டாக பட்டம் வென்றதாக அறிவிக்கப்பட்டது.

2.பேஸல் ஓபன் உள்ளரங்க டென்னிஸ் இறுதி ஆட்டத்தில் வென்றதின் மூலம் தனது 99-ஆவது ஏடிபி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார் ரோஜர் பெடரர்.


ன்றைய தினம்

  • உலக சிக்கன தினம்
  • இந்தியா ஐநாவில் இணைந்தது(1945)
  • இந்திய விடுதலை போராட்ட வீரர் முத்துராமலிங்கம் பிறந்த தினம்(1908)
  • இந்திய விடுதலை போராட்ட வீரர் முத்துராமலிங்கம் நினைவு தினம்(1963)
  • செஞ்சிலுவை சங்கத்தை ஆரம்பித்த ஹென்றி டியூனாண்ட் நினைவு தினம்(1910)
  • ஜான்லோகி பயர்ட், பிரிட்டனின் முதல் தொலைக்காட்சி ஒளிபரப்பியை அமைத்தார்(1925)
  • தென்னகம்.காம் செய்தி குழு