தமிழகம்

1.வேலூர் அருகே அமைந்துள்ள அப்துல்லாபுரம் விமான நிலையத்தில் இருந்து வரும் ஆண்டு ஜூன் மாதம் முதல் விமானங்களை இயக்குவதற்கு வாய்ப்பு உள்ளதாக வேலூர் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

2.தமிழகத்தில்  சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி.ஏ.ஜி.பொன் மாணிக்கவேல் இன்று ஓய்வுபெறுகிறார்.

3.தமிழகத்தில் வரும் கல்வியாண்டு முதல் 4 ஆண்டு ஒருங்கிணைந்த பி.எட். படிப்பு தொடங்கப்படும் என தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத் துணைவேந்தர் எஸ்.தங்கசாமி தெரிவித்தார்.

4.மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலையை அண்ணா அறிவாலயத்தில் நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாகாந்தி வரும் டிசம்பர் 16-ஆம் தேதி திறந்து வைக்க உள்ளார்.


இந்தியா

1.இந்தியா உள்பட 9 நாடுகளின் 31 செயற்கைக் கோள்களுடன் பிஎஸ்எல்வி – சி 43 ராக்கெட் வெற்றிகரமாக வியாழக்கிழமை விண்ணில் ஏவப்பட்டது.

2. விவசாயிகளின் வங்கிக் கடனை தள்ளுபடி செய்யவும், விவசாய விளைப்பொருள்களுக்கு கட்டுப்படியாகக் கூடிய விலையை நிர்ணயம் செய்யவும் சிறப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரை கூட்ட வேண்டும் என்று அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பில் விவசாயிகளின் பேரணி தில்லியில் தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

3.நாடு முழுவதும் 3,000 பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் சேவை மையங்களில் ஆதார் சேவைகளை வழங்குவதற்கு சிறப்பு மையங்கள் விரைவில் அமைக்கப்படவுள்ளன.

4.குவைத்தில் நடைபெற்ற விழாவில் விண்வெளி விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரைக்கு செவ்வாய் மனிதன் என்ற பட்டம் வழங்கப்பட்டது.


வர்த்தகம்

1.டிராக்டர்ஸ் அண்டு ஃபார்ம் எக்கியூப்மெண்ட் (டாஃபே) நிறுவனம், சிறிய வகை டிராக்டர்களை தயாரிக்க ஜப்பானின் ஐஎஸ்இகேஐ நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.

2.கிளாக்சோ ஸ்மித்கிளைன் நிறுவனத்தின், ‘ஹார்லிக்ஸ்’ ஊட்டச்சத்து பான பிராண்டை, ‘யூனிலிவர்’ வாங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

3.பணம் எடுக்க, டெபாசிட் செய்ய பயன்படும், ஏ.டி.எம்., இயந்திரத்தில், இனி காசோலையை செலுத்தி ரொக்கம் பெறலாம்.இந்த புதிய வசதியை, ஏ.டி.எம்., தயாரிப்பு நிறுவனமான, என்.சி.ஆர்., கார்ப்பரேஷன் அறிமுகப்படுத்தியுள்ளது.

4.நாட்டில், பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களில், 7 லட்சம் நிறுவனங்கள் செயல்படாமல் உள்ளதாக, மத்திய நிறுவன விவகாரங்கள் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5.தமிழக அரசு சார்பில்‘ஜிம் – 2’ என்ற இரண்டாவது உலக முதலீட்டாளர்கள்  மாநாட்டின் பங்குதாரர் நாடுகளாக, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜப்பான், தென் கொரியா மற்றும் இங்கிலாந்து ஆகியவை தேர்வு செய்யப்பட்டு உள்ளன.


உலகம்

1.ஜி 20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஆர்ஜென்டீனா தலைநகர் பியூனஸ் அயர்ஸுக்கு சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே ஆகியோருடன் வெள்ளிக்கிழமை முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

2.இந்திய-சீன ஆகியவற்றின் ராணுவப்படைகள் பங்கேற்கும் 14-நாள் கூட்டுப்பயிற்சி வரும் டிசம்பர் 10-ஆம் தேதி தென்மேற்கு சீனாவிலுள்ள செங்டு பகுதியில் தொடங்கவுள்ளதாக சீன பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


விளையாட்டு

1.பிடே உலக செஸ் போட்டியில் நார்வேயின் மாக்னஸ் கார்ல்ஸென்  மீண்டும் சாம்பியன் பட்டம் வென்று தனது ஆதிக்கத்தை நிலைநாட்டினார்.

2.போர்ச்சுகல் ஜூனியர் மற்றும் கேடட் ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டி ஆடவர் மற்றும் இரட்டையர் பிரிவுகளில் இந்தியாவின் மானவ் தாக்கர் சாம்பியன் பட்டம் வென்றார்.

3.தென்மண்டல பல்கலைக் கழகங்களுக்கு இடையேயான மகளிர் இறகுப் பந்துப் போட்டி வேலூர் விஐடி பல்கலைக் கழகத்தில் டிசம்பர் 4- இல் தொடங்கி 8-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.


ன்றைய தினம்

  • ஸ்காட்லாந்து தேசிய தினம்
  • பார்போடஸ் விடுதலை தினம்(1966)
  • வளைகுடாப் போர் முடிவுக்கு வந்தது(1995)
  • இந்தியாவின் முதல் விண்ணலை அறிவியலாளர் ஜகதிஷ் சந்திர போஸ் பிறந்த தினம்(1858)
  • தென்னகம்.காம் செய்தி குழு