Current Affairs – 30 November 2017
தமிழகம்
1.தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகள் அனைத்தையும் 6 மாதங்களுக்குள் மூடுவதற்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.
2.மழைக் காலங்களில் மின்சாரம் தொடர்பான புகார்கள் குறித்து பொதுமக்கள் எளிதில் தகவல் அளிக்க ஏதுவாக வாட்ஸ்-அப் சேவை மையங்களை மின்சார வாரியம் தொடங்கியுள்ளது.
இந்தியா
1.கடல்சார் பாதுகாப்பில் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் சிங்கப்பூருடன் மத்திய அரசு ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது.
2.நிதி ஆயோக், மதிய உணவுத் திட்டத்தில் கம்பு சோறு அளிக்கவும், பொதுமக்களுக்கு ரேஷன் மூலமாக கம்பு தானியம் வினியோகிக்கவும் பரிந்துரை செய்துள்ளது.
உலகம்
1.ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட, சவுதி அரேபிய இளவரசர், மிடேப் பின்
அப்துல்லா, 6,500 கோடி ரூபாய் அபராதம் செலுத்தியதையடுத்து, நேற்று விடுதலையானார்.
வர்த்தகம்
1.ஏற்றுமதியாளர்கள், ஜூலை – அக்., வரை, ஏற்றுமதி செய்த வகையில் முன்கூட்டி செலுத்திய, 6,500 கோடி ரூபாய் வரியை, திரும்ப அளிக்கக் கோரி விண்ணப்பித்து உள்ளனர் என,
நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
2.மதுரை விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள, சர்வதேச சரக்கு முனையம், டிச., 15 முதல், செயல்பாட்டுக்கு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
விளையாட்டு
1.இந்திய குத்துச்சண்டை சம்மேளனமானது (பிஎஃப்ஐ) இந்திய குத்துச்சண்டைக்கான தேசிய அமைப்பு என இந்திய ஒலிம்பிக் சங்கம் (ஐஓஏ) புதன்கிழமை அங்கீகாரம் வழங்கியது.
இன்றைய தினம்
1.1995 – வளைகுடாப் போர் முடிவுக்கு வந்தது.
2.1858 – ஜகதீஷ் சந்திர போஸ், இந்திய முதல் விண்ணலை அறிவியலாளர் பிறந்த நாள்
–தென்னகம்.காம் செய்தி குழு