Current Affairs – 30 May 2019
தமிழகம்
1.பாரம்பரிய நெல் ரகங்களைப் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்ட நெல் ஜெயராமனின் குறிப்புகள் பிளஸ் 2 தாவரவியல் பாடநூலில் இடம்பெற்றுள்ளன.
2.தமிழகம் முழுவதும் அங்கீகாரம் பெற 2 ஆயிரத்து 915 தனியார் பள்ளிகள் விண்ணப்பித்திருப்பதாக மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
3.எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து, எச்.வசந்தகுமார் அளித்த கடிதம் ஏற்றுக் கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து நாங்குநேரி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
இந்தியா
1.நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி இரண்டாவது முறையாக பதவியேற்க இருக்கிறார். அவருடன் மத்திய அமைச்சர்களும் பதவியேற்க இருக்கின்றனர். தில்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் இரவு 7 மணிக்கு நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைக்க இருக்கிறார்.
2.ஒடிஸா முதல்வராக பிஜு ஜனதா தளம் கட்சித் தலைவர் நவீன் பட்நாயக் பதவியேற்றார். அந்த மாநில முதல்வராக அவர் பதவியேற்பது இது தொடர்ச்சியாக 5ஆவது முறையாகும்.
3.அரசு வேலையில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு அளிப்பதை நிகழாண்டு பிப்ரவரி 1-ஆம் தேதியில் இருந்து அமல்படுத்துமாறு தில்லி அரசின் பணிகள் துறை அனைத்து துறைகளுக்கும் உத்தரவிட்டுள்ளது.
4.அருணாசலப் பிரதேசத்தின் முதல்வராக, பாஜக தலைவர் பெமா காண்டு மீண்டும் பதவியேற்றுக் கொண்டார். இவர், அருணாசலப் பிரதேசத்தின் 10-ஆவது முதல்வர் ஆவார்.
வர்த்தகம்
1. டாலர் கண்காணிப்பு நாடுகளின் பட்டியலில் இருந்து, இந்தியா மற்றும் சுவிட்சர்லாந்தை, அமெரிக்கா நீக்கியுள்ளது. இரு நாடுகளின் அன்னியச் செலாவணி செயல்பாடுகள், சந்தேகத்திற்கிடமின்றி உள்ளதால், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
2.உலகின் உயரமான சிலையாக, சர்தார் வல்லபபாய் படேலின், ‘ஒருமைப்பாட்டு சிலை’யை வடிவமைத்து நிறுவியதன் வாயிலாக, ‘வேர்ல்டு ஆர்க்கிடெக்சர் நியூஸ்’ விருது, எல் அண்டு டி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
உலகம்
1.இந்தியாவுக்கான சீன தூதராக பணியாற்றிய லுவோ சாஹூய், அந்நாட்டு வெளியுறவுத் துறை இணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சீன வெளியுறவு இணை அமைச்சராக பணியாற்றிய காங் ஜூவான்யூ, ஜப்பான் தூதராக நியமிக்கப்பட்டதையடுத்து, லுவோ அந்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
2.பப்புவா நியூ கினியா பிரதமர் பீட்டரோ நீல், தனது பதவியை புதன்கிழமை ராஜினாமா செய்தார்.
3.ஆஸ்திரேலிய பிரதமராக ஸ்காட் மோரிஸன் புதன்கிழமை மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்டார்.
அவருடன், அவரது அமைச்சரவையும் பதவிப் பிரமாணம் செய்துகொண்டது.
விளையாட்டு
1.12ஆவது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி, இங்கிலாந்தின் கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் வியாழக்கிழமை தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் இங்கிலாந்தும், தென்னாப்பிரிக்காவும் மோதுகின்றன.
2.தமிழ்நாட்டைச் சேர்ந்த 19 வயது அரவிந்த் சிதம்பரம், கடந்த டிசம்பர் மாதம் தேசிய செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றார். இந்நிலையில் தேசிய அளவிலான ரேபிட், பிளிட்ஸ் வகை செஸ் போட்டிகளையும் வென்று புதிய சாதனை படைத்துள்ளார்.
இன்றைய தினம்
- அல்பேனியா தனி நாடாகியது(1913)
- இந்தியாவில் கோவா தனி மாநிலமாகியது(1987)
- பிராக் அமைதி உடன்பாடு எட்டப்பட்டது(1635)
- திரினிடாட் டொபாகோவுக்கு முதல் தொகுதி இந்தியர்கள் வந்திறங்கினர்(1845)
– தென்னகம்.காம் செய்தி குழு