தமிழகம்

1.கல்வி நிறுவனங்களுக்கு அருகே புகையிலை விற்பனையைத் தடுக்கும் வகையில், புதிய செல்லிடப்பேசி செயலியை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் வி.சாந்தா அறிமுகப்படுத்தினார்.
2.பயணிகளின் வசதிக்காக நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு ஜூன் 10, ஜூலை 1 ஆகிய நாள்களில் சுவிதா சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.சுவிதா சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு மே 31-ஆம் தேதி காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
3.அரசுப் பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
4.காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தராக பேராசிரியர் என்.ராஜேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை பல்கலைக்கழக வேந்தரும், தமிழக ஆளுநருமான பன்வாரிலால் புரோஹித் நேற்று பிறப்பித்துள்ளார்.


இந்தியா

1.உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு இணங்கி, உத்தரப் பிரதேச மாநிலம், லக்னௌவில் உள்ள அரசு இல்லத்தை பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி காலி செய்தார்.
2.உத்தரகண்ட் மாநிலத்தில், இந்தியா, நேபாளம் நாடுகளின் கூட்டு ராணுவப் பயிற்சி நேற்று தொடங்கியது.சூரிய கிரண் என்ற பெயரில், உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள பிதோரகரில் இந்த கூட்டு ராணுவப் பயிற்சி நடைபெறுகிறது.


வர்த்தகம்

1.நாட்டின் மிகப் பெரிய நிலக்கரி உற்பத்தி நிறுவனமான கோல் இந்தியாவின் நான்காம் காலாண்டு நிகர லாபம் 52 சதவீதம் சரிந்துள்ளது.


உலகம்

1.ஐ.நா. அமைதிப்படை உலகெங்கிலும் கடந்த 70 ஆண்டுகளில் பங்கெடுத்த பலதரப்பட்ட நிகழ்வுகளில் இதுவரை 3,737 பேர் உயிர் தியாகம் செய்துள்ளனர். இந்த எண்ணிக்கையில் இந்தியர்கள் முதலிடத்தில் உள்ளனர்.


விளையாட்டு

1.இந்திய வட்டு எறிதல் வீரர் விகாஸ் கெளடா (34), அனைத்து விதமான போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்துள்ளார்.


ன்றைய தினம்

  • 1975-ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.

–தென்னகம்.காம் செய்தி குழு