தமிழகம்

1.தமிழகத்தில் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் 845 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 42 வேட்பாளர்களும், குறைந்தபட்சமாக நீலகிரி தொகுதியில் 10 வேட்பாளர்களும் களம் காண உள்ளனர்.


இந்தியா

1.வாக்கு ஒப்புகைச் சீட்டுகளை எண்ணும் விஷயத்தில் தற்போது கடைப்பிடிக்கும் முறையே மிகச் சிறந்ததாக உள்ளது என்று உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.


வர்த்தகம்

1.பொதுத் துறையைச் சேர்ந்த, பஞ்சாப் நேஷனல் பேங்க் உள்ளிட்ட, ஐந்து வங்கிகளுக்கு, மத்திய அரசு, 21 ஆயிரத்து, 428 கோடி ரூபாய் பங்கு மூலதனம் வழங்குகிறது.

2.அடுத்த நிதியாண்டிற்கான, மூன்றாம் நபர் வாகன காப்பீட்டு பிரிமியத்தில் மாற்றம் ஏதும் இல்லை என, காப்பீட்டு ஒழுங்கு முறை ஆணையம் தெரிவித்து உள்ளது.

3.வரும் ஏப்ரல்-ஜூன் காலாண்டிற்கு, சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்களில் மாற்றம் எதையும் செய்யவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.


உலகம்

1.பிரிட்டன் நாடாளுமன்றத்தில் 3-ஆவது முறையாக தாக்கல் செய்யப்பட்ட பிரெக்ஸிட் ஒப்பந்த மசோதாவை எம்.பி.க்கள் மீண்டும் நிராகரித்தனர்.

2.அரசியல் பதற்றம் நிலவி வரும் வெனிசூலாவில், அந்த நாட்டின் இடைக்கால அதிபராக தன்னை அறிவித்துக் கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் ஜுவான் குவாய்டோவை நாடாளுமன்றத் தலைவர் பதவியிலிருந்து அகற்றுவதாக அதிபர் நிகோலஸ் மடூரோ அறிவித்துள்ளார்.


விளையாட்டு

1.மியாமி ஓபன் டென்னிஸ் போட்டி அரையிறுதிச் சுற்றுக்கு ரோஜர் பெடரர், டெனிஸ் ஷபவலோவ் ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.

2.இந்திய ஓபன் பாட்மிண்டன் போட்டி ஆடவர் ஒற்றையர் அரையிறுதிச் சுற்றுக்கு இந்திய வீரர்கள் ஸ்ரீகாந்த், பருபல்லி காஷ்யப் ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.


ன்றைய தினம்

  • உலக இட்லி தினம்
  • அமெரிக்க தேசிய மருத்துவர்கள் தினம்
  • அமெரிக்காவில் புளோரிடா உருவாக்கப்பட்டது(1822)
  • ரப்பர் உடனான பென்சிலுக்கான காப்புரிமம் ஹைமன் லிபமன் என்பவரால் பெறப்பட்டது(1858)
  • தமிழில் நாட்குறிப்பு எழுதிய ஆனந்த ரங்கம் பிள்ளை பிறந்த தினம்(1709)

– தென்னகம்.காம் செய்தி குழு