தமிழகம்

1.தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக க.சண்முகம் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தின் ஒப்புதலுடன் பணியில் இருந்து ஓய்வு பெறவுள்ள தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன்  பிறப்பித்தார்.

2.தமிழகத்தில் காலியாகவுள்ள ஆறு மாநிலங்களவை இடங்களுக்கான வேட்புமனு தாக்கல் திங்கள்கிழமை (ஜூலை 1) தொடங்குகிறது.


இந்தியா

1.ஒரே தேசம், ஒரே குடும்ப அட்டை திட்டத்தை அடுத்த ஓராண்டுக்குள் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் நிறைவேற்ற வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

2.நாடு முழுவதும் கடந்த 5 ஆண்டுகளில் யானைகள் தாக்கி சுமார் 2,400 பேரும், புலிகள் தாக்கி 224 பேரும் உயிரிழந்துவிட்டதாக மக்களவையில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.


வர்த்தகம்

1. இந்திய நிறுவனங்கள் வெளிநாடுகளில் திரட்டிய கடன் கடந்த 2018 மே மாதத்தில் 135 கோடி டாலராக (ரூ.9,450 கோடி) இருந்தது.இது, நடப்பாண்டு மே மாதத்தில் இருமடங்கு அதிகரித்து 355 கோடி டாலரை (ரூ.24,500 கோடி) எட்டியுள்ளது.

2.நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஜூன் 21-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் வரலாற்று உச்சத்தை எட்டியுள்ளது.நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஜூன் 21-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 421 கோடி டாலர் (ரூ.29,500 கோடி) அதிகரித்து 42,642 கோடி டாலரை (ரூ.29.84 லட்சம் கோடி) எட்டியுள்ளது.


உலகம்

1.2025-ஆம் ஆண்டுக்குள் ரூ.3.5 லட்சம் கோடி மதிப்பில் வர்த்தகம் மேற்கொள்ள இந்தியா-இந்தோனேசியா நாடுகள் இலக்கு நிர்ணயித்துள்ளன.

2.பயங்கரவாதத்துக்கு நிதி கிடைப்பதை முடக்க நடவடிக்கை எடுப்பது என்று ஜி20 அமைப்பு நாடுகளால் வெளியிடப்பட்ட பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ருவநிலை மாற்றத்துக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுப்பது என்று அமெரிக்காவைத் தவிர பிற ஜி20 நாடுகள் அனைத்தும் ஒப்புக் கொண்டுள்ளன.

3.மரண தண்டனை மற்றும் சித்திரவதைக்காக பயன்படுத்தப்படும் உபகரணங்களின் வர்த்தகத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான வழிமுறைகளை பரிசீலிக்கும் ஐ.நா. தீர்மானத்தின் வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தது.


விளையாட்டு

1.பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமி (என்சிஏ)யின் தலைவராக  ராகுல் திராவிட் நியமிக்கப்பட்டுள்ளார் என பிசிசிஐ சிஓஏ அறிவித்துள்ளது.

2.பிஃபா மகளிர் உலகக் கோப்பை அரையிறுதிச் சுற்றுக்கு நடப்பு சாம்பியன் அமெரிக்கா தகுதி பெற்றுள்ளது.

3.கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி அரையிறுதிச் சுற்றுக்கு நடப்பு சாம்பியன் சிலி, ஆர்ஜென்டீனா உள்ளிட்டவை தகுதி பெற்றுள்ளன.


ன்றைய தினம்

  • காங்கோ விடுதலை தினம்(1960)
  • ஒருங்கிணைக்கப்பட்ட சர்வதேச நேரத்தில் ஒரு லீப் வினாடி அதிகரிக்கப்பட்டது(1972)
  • முதலாவது ஹாரி பேட்டர் நூல் வெளியிடப்பட்டது(1997)
  • உலகின் முதல் அவசர தொலைப்பேசி எண்ணான 999 லண்டனில் அறிமுகப்படுத்தப்பட்டது(1937)

– தென்னகம்.காம் செய்தி குழு