தமிழகம்

1.நடிகர் சிவாஜி கணேசன், சுதந்திரப் போராட்ட வீரர் ராமசாமி படையாச்சியார் ஆகியோரின் பிறந்தநாளை அரசு விழாவாகக் கொண்டாட முடிவு செய்துள்ளது தமிழக அரசு.

2.ஏலகிரி மலையில் வீர ராஜேந்திரன் காலத்து எழுத்துடை நடுகற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.


இந்தியா

1.ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டம், தமிழகத்தில் வரும் நவம்பர் முதல் அமல்படுத்தப்படவுள்ளது என்று மாநிலக் கருவூலக் கணக்குத் துறை முதன்மைச் செயலர் சு. ஜவஹர் தெரிவித்தார்.


வர்த்தகம்

1.சரக்கு – சேவை வரி (ஜிஎஸ்டி) சட்டம் அமல்படுத்தப்பட்டு ஞாயிற்றுக்கிழமையுடன் (ஜூலை 1) ஓராண்டு நிறைவடைகிறது. இதையொட்டி, இந்த நாளானது ஜிஎஸ்டி தினமாக நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.


உலகம்

1.அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் இறக்குமதி வரி விதிப்புக் கொள்கைகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், அந்த நாட்டிலிருந்து இறக்குமதியாகும் உலோகம் மற்றும் உணவுப் பொருள்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும் என்று கனடா அறிவித்துள்ளது.


விளையாட்டு

1. நாக் அவுட் சுற்று ஆட்டத்தில் 4-3 என ஆர்ஜென்டீனாவை வீழ்த்தி பிரான்ஸ் காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.உருகுவே அணி போச்சுகல் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

2.சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கிப் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு இந்திய ஆடவர் அணி தகுதி பெற்றுள்ளது. நெதர்லாந்து அணியை 1-1 என டிரா செய்தது.


ன்றைய தினம்

  • இந்திய மருத்துவர்கள் தினம்
  • சோமாலியா விடுதலை தினம்(1960)
  • சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உருவாக்கப்பட்டது(2002)
  • இந்தியாவுக்கு ஆகஸ்ட் 15ம் தேதி முழு விடுதலை வழங்க பிரிட்டன் நாடாளுமன்றத்தில் முடிவெடுக்கப்பட்டது(1947)
  • ஐரோப்பிய சமூகம் உருவாக்கப்பட்டது(1967)

–தென்னகம்.காம் செய்தி குழு