Current Affairs – 30 July 2019
தமிழகம்
1.உச்சநீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, லோக் ஆயுக்தா உறுப்பினர்கள் எம்.ராஜாராம், கே.ஆறுமுகம் நியமன ஆணையை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வழங்கினார்.
2.தமிழகத்தில் கடந்த 12 ஆண்டுகளில் புலிகளின் எண்ணிக்கை 76-இல் இருந்து 264-ஆக மூன்று மடங்குக்கு மேல் உயர்ந்துள்ளதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
3.அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் குறைந்தபட்சம் 1,000 நூல்கள் கொண்ட நூலகங்களை கட்டாயமாக ஏற்படுத்த வேண்டும் என பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.
4.தூத்துக்குடி வஉசி துறைமுகம் கடந்த 27-ஆம் தேதி ஒரே நாளில் 1,80,597 மெட்ரிக் டன் சரக்குகளைக் கையாண்டு சாதனை படைத்துள்ளது.
இந்தியா
1.உத்தரப் பிரதேச ஆளுநராக நியமனம் செய்யப்பட்ட ஆனந்திபென் படேல், பதவியேற்றுக்கொண்டார்.
2.சர்வதேச புலிகள் தினம் (ஜூலை 29) உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி, கடந்த 2018-ஆம் ஆண்டு வரை நடத்தப்பட்ட புலிகள் கணக்கெடுப்பு அறிக்கையை தில்லியில் பிரதமர் மோடி வெளியிட்டார். இந்த அறிக்கையின்படி, தற்போது இந்தியாவில் 2,977 புலிகள் உள்ளன.கடந்த 2006-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, நம் நாட்டில் 1,411 புலிகள் இருந்தன.
3.நாடு முழுவதும் உள்ள வக்ஃபு வாரியத்தின் சொத்துகள் 100 நாள்களில் 100 சதவீதம் டிஜிட்டல்மயமாக்கப்படும் என்று சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்தார்.
4.இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு மாற்றாக, தேசிய மருத்துவ ஆணையம் அமைக்க வழிவகுக்கும் மசோதா, மக்களவையில் நிறைவேறியது.
5.நாடாளுமன்ற மாநிலங்களவையில் திவால் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது.
வர்த்தகம்
1.கடந்த 2018-ஆம் ஆண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான இரண்டாவது காலாண்டில் ஸ்மார்ட்போன் விற்பனை 3.31 கோடியாக இருந்தது. இந்த நிலையில், நடப்பாண்டில் இதே கால அளவில் விற்பனை 0.5 சதவீதம் குறைந்து 3.30 கோடியாகி உள்ளது.
2.தொலைதொடர்பு வர்த்தகத்தில் ஜூன் மாத நிலவரப்படி ரிலையன்ஸ் ஜியோ முதலிடம் பிடித்துள்ளது.
3.மத்திய அரசு, மூன்றிலிருந்து, நான்கு பிராந்திய கிராமப்புற வங்கிகளின், புதிய பங்கு வெளியீட்டுக்கு திட்டமிட்டு வருகிறது.
4.சென்னை, மும்பை, கோல்கட்டா, பெங்களூரு, ஐதராபாத் உள்ளிட்ட, ஒன்பது முக்கிய நகரங்களில், தரவுகள் பகுப்பாய்வு நிறுவனமான, ‘பிராப்ஈக்யுட்டி’ நிறுவனம், ஆய்வை மேற்கொண்டது. ஜூன் மாதத்துடன் முடிவடைந்த முதல் காலாண்டில், வீடுகள் விற்பனை, 6 சதவீதம் அதிகரித்துள்ளது. மொத்தம், 61 ஆயிரத்து, 789 வீடுகள், இக்காலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
உலகம்
1.மேற்கு ஆப்பிரிக்க நாடான பெனினுக்கு சுமார் ரூ.687 கோடி கடனுதவியை இந்தியா வழங்கவிருக்கிறது. அந்நாட்டு அதிபர் பேட்ரிஸ் டலோனுடன் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின்னர், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இதைத் தெரிவித்தார்.
2.வர்த்தகப் போர் பதற்றத்தை முடிவுக் கொண்டு வரும் வகையில், அமெரிக்க மற்றும் சீன பிரதிநிதிகள் குழு பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்கவுள்ளது.
விளையாட்டு
1.ராஜஸ்தான் மாநிலம், ஜெய்சால்மரில் வரும் ஆகஸ்ட் மாதம் 6ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரையிலும் இப்போட்டி நடைபெறவுள்ளது. இதில் இந்திய ராணுவ குழு தவிர்த்து, சீனா, ரஷியா, ஆர்மீனியா, கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட 7 நாடுகளின் ராணுவ குழுக்கள் கலந்து கொள்கின்றன. இதற்காக 7 நாடுகளைச் சேர்ந்த ராணுவ குழுக்கள் தில்லிக்கு வந்துள்ளன.
2.மலேசியாவில் நடைபெற்ற உலக கபடி சாம்பியன் போட்டியில் பட்டம் வென்ற இந்திய ஆடவர், மகளிர் அணிகளுக்கு சென்னையில் பாராட்டு விழா நடைபெற்றது.
இன்றைய தினம்
- பசிபிக் கடலில் மால்டன் தீவு கண்டுபிடிக்கப்பட்டது(1825)
- முதலாவது கால்பந்து உலகக் கோப்பையை உருகுவே வென்றது(1930)
- பாக்தாத் நகரம் அமைக்கப்பட்டது(762)
- ஜெருசலம் அரசியலமைப்பு சட்டம் இஸ்ரேலில் நிறைவேற்றப்பட்டது(1967)
– தென்னகம்.காம் செய்தி குழு