தமிழகம்

1.சென்னை-பெங்களூரு விரைவுச்சாலைக்காக காஞ்சிபுரம் மாவட்டத்தில் நிலம் கையகப்படுத்தும் பணிகள் நிறைவு பெற்றுவிட்டன.


இந்தியா

1.செயற்கைக்கோள்களில் பயன்படுத்தப்படும் சூரியசக்தி பேட்டரிகளை தயாரிக்கும் திட்டத்தை இஸ்ரோ மேற்கொள்ள உள்ளது என்றார் அதன் தலைவர் சிவன்.

2.எதிரி நாடுகளின் ஏவுகணைகள் தாக்குதலில் இருந்து, தில்லி, மும்பை உள்ளிட்ட நாட்டின் முக்கிய நகரங்களை காக்க அதிநவீன வான்பாதுகாப்பு சாதனத்தை நிறுவும் பணியில் இந்திய அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.


வர்த்தகம்

1.காப்பீட்டு நிறுவனங்களிடம் உரிமை கோரப்படாமல் ரூ.15,167 கோடி இருக்கும் தகவல் தெரிய வந்துள்ளது.

2.நாட்டில் மொத்தம் 17.79 லட்சம் நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன; இவற்றில் 66 சதவீத நிறுவனங்கள் மட்டுமே இப்போது செயல்பாட்டில் உள்ளன என்று நிறுவனங்கள் விவகாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


உலகம்

1.இந்தியா- நேபாளம் இடையேயான சிந்தனையாளர்கள் மாநாடு, நேபாளத் தலைநகர் காத்மாண்டில், வரும் செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது.


விளையாட்டு

1.அமெரிக்காவுடன் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா செய்து இந்தியா உலகக் கோப்பை மகளிர் ஹாக்கி நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றது.


ன்றைய தினம்

  • பசிபிக் கடலில் மால்டன் தீவு கண்டுபிடிக்கப்பட்டது(1825)
  • முதலாவது கால்பந்து உலகக் கோப்பையை உருகுவே வென்றது(1930)
  • பாக்தாத் நகரம் அமைக்கப்பட்டது(762)
  • ஜெருசலம் அரசியலமைப்பு சட்டம் இஸ்ரேலில் நிறைவேற்றப்பட்டது(1967)

–தென்னகம்.காம் செய்தி குழு