தமிழகம்

1.நீர்நிலை ஆக்கிரமிப்பாளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கக் கூடாது என, தலைமை தேர்தல் அதிகாரி சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.


இந்தியா

1.பிரபல தமிழ் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட இந்திய மொழிகளைச் சேர்ந்த 24 எழுத்தாளர்களுக்கு செவ்வாய்க்கிழமை சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது.

2.நாட்டின் முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர், சோஷலிஸத் தலைவர் போன்ற பன்முக அடையாளங்களைக் கொண்ட ஜார்ஜ் பெர்னாண்டஸ் செவ்வாய்க்கிழமை மறைந்தார். அவருக்கு வயது 88.

3.மத்திய அரசுப் பணியாளர் தேர்வு ஆணையத்தின்(யுபிஎஸ்சி) உறுப்பினராக உள்நாட்டு விமானப்போக்குவரத்து துறை செயலர் ராஜீவ் நயன் செளபே நியமிக்கப்பட்டுள்ளார்.


வர்த்தகம்

1.விலை ஆதரவு திட்டத்தின் (பிஎஸ்எஸ்) கீழ், மத்திய அரசு இதுவரையில் ரூ.24,503 கோடி மதிப்பிலான 52.83 லட்சம் டன் பருப்பு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துகளை கொள்முதல் செய்துள்ளதாக வேளாண் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

2.தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் ஒரே நாளில் 59 ஆயிரத்து 839 மெட்ரிக் டன் நிலக்கரி கையாண்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது.


உலகம்

1.ஊழல் நிறைந்த நாடுகளின் பட்டியலில், இந்தியா 78ஆவது இடத்தில் உள்ளது.
சர்வதேச வெளிப்படைத்தன்மை நிர்வாக அமைப்பால் (டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல்) 2018ஆம் ஆண்டுக்கான ஊழல் நாடுகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் இந்தியா 78ஆவது இடத்தில் உள்ளது. 2016ஆம் ஆண்டில் 79ஆவது இடத்திலும், 2017ஆம் ஆண்
டில் 81ஆவது இடத்திலும் இந்தியா இருந்தது குறிப்பிடத்தக்கது.

2.அமெரிக்க நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில், வரும் பிப்ரவரி 5-ஆம் தேதி அதிபர் டொனால்ட் டிரம்ப் உரை நிகழ்த்துகிறார்.


விளையாட்டு

1.ஸ்பெயின் அணியை 5-2 என வீழ்த்தினர் இந்திய மகளிர் ஹாக்கி அணியினர்.
உலகக்கோப்பையில் மூன்றாம் இடம் பெற்ற ஸ்பெயின் மகளிர் அணியுடன் 5 ஆட்டங்கள் கொண்ட தொடரில் இந்திய மகளிர் அணி பங்கேற்றுள்ளது.


ன்றைய தினம்

  • உலக தொழுநோய் ஒழிப்பு தினம்
  • இந்தியாவில் தியாகிகள் தினம்
  • தேசத்தந்தை மகாத்மா காந்தி இறந்த தினம்(1948)
  • பாகிஸ்தான் பொதுநலவாய அமைப்பிலிருந்து விலகியது(1972)
  • ரேஞ்சர் 6 விண்கலம் ஏவப்பட்டது(1964)

– தென்னகம்.காம் செய்தி குழு