இந்தியா

1.மத்திய தொலை தொடர்பு துறை மந்திரி மனோஜ் சின்கா டெல்லியில் நேற்று தபால் ஊழியர்களுக்கு புதிய சீருடையை அறிமுகப்படுத்தினார்.
2.சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு மவுன அஞ்சலி செலுத்தும் வகையில் சென்னையில் இன்று காலை 11 முதல் 11.02 மணி வரை 2 நிமிடம் போக்குவரத்து நிறுத்தப்படும் என்று மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
3.இந்தியாவின் 69-வது குடியரசு தினம், ட்விட்டரில் புதிய சாதனை படைத்துள்ளது. அன்றைய தினம் மட்டும் 11 லட்சம் பேர் குடியரசு தினம் குறித்து ட்விட் செய்துள்ளனர்.


உலகம்

1.துருக்கியின் மார்டின் நகரை சேர்ந்த விவசாயி சுல்தான் கோசன் (36). இவர் 8 அடி 9 அங்குலம் உயரமானவர். இதற்காக அவர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரை சேர்ந்தவர் ஜோதி ஆம்ஜி (25). இவரது உயரம் 2 அடி 6 அங்குலம்.உலகின் குள்ளமான பெண் என்ற வகையில் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார்.இவர்கள் இருவரும் எகிப்தில் நேருக்கு நேர் சந்தித்தனர்.


இன்றைய தினம்

1.1964 – ரேஞ்சர் 6 விண்கலம் ஏவப்பட்டது.

 

–தென்னகம்.காம் செய்தி குழு