இந்தியா

1.பெங்களூருவில் புத்தாண்டு அன்று பிறக்கும் முதல் பெண் குழந்தைக்கு இலவசக் கல்வி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இத்தகவலை பெங்களூரு மேயர் சம்பத் ராஜ் தெரிவித்துள்ளார்.சுகப் பிரசவம் மூலம் பிறக்கும் பெண் குழந்தைக்கு மட்டுமே இந்த சலுகை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2.தெலங்கானாவின் தலைநகரான ஹைதராபாத்தில் வரும் 31ம் தேதி முதல் மக்கள் பணியில் ரோபோ போலீஸ் ஈடுபடுத்தப்பட உள்ளது. உலகிலேயே துபாய்க்கு அடுத்தபடியாக இந்த சாதனையை தெலங்கானா செய்துள்ளது..


உலகம்

1.தேர்தலில் வெற்றி பெற்றதால் லைபீரியா நாட்டு அதிபராக முன்னாள் கால்பந்து வீரர் ஜார்ஜ் வேக் பதவியேற்கவுள்ளார்.
2.90 நிமிடங்களுக்கு ஒருமுறை பூமியைச் சுற்றி வருவதால் புத்தாண்டு தினத்தை சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள 6 வானியல் விஞ்ஞானிகள் 16 முறை அனுபவிப்பர் என்று நாசா அதிசயத் தகவல் வெளியிட்டுள்ளது.


விளையாட்டு

1.இளம் வயதில் ரஞ்சி டிராபி தொடரின் இறுதிப் போட்டியில் டெல்லி அணியின் கேப்டனாக செயல்பட்டு சச்சின் தெண்டுல்கர் சாதனையை ரிஷப் பந்த் முறியடித்துள்ளார்.


இன்றைய தினம்

1.1906 – அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சி டாக்காவில் ஆரம்பிக்கப்பட்டது.
2.1941 – மகாத்மா காந்தி காங்கிரஸ் தலைமைப் பதவியிலிருந்து விலகினார்.
3.1949 – இந்தியா சீனாவை அங்கீகரித்தது.

 

–தென்னகம்.காம் செய்தி குழு