Current Affairs – 30 August 2019
தமிழகம்
1.தமிழக காவல்துறையில் 36 டிஎஸ்பி-க்களை (காவல் துணைக் கண்காணிப்பாளர்) பணியிட மாற்றம் செய்து சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபி ஜே.கே.திரிபாதி உத்தரவிட்டார்.
2.தமிழக அரசின் கலை மற்றும் கலாசார ஆணையராக சிஜி தாமஸ் வைத்தியன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தியா
1.நீதிபதி வி.ராமசுப்பிரமணியன், பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி கிருஷ்ண முராரி, ராஜஸ்தான் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ரவீந்திர பட், கேரள உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி ரிஷிகேஷ் ராய் ஆகிய நால்வருக்கும் பதவி உயர்வு அளித்து உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிப்பதற்கு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான கொலீஜியம் பரிந்துரை செய்யவுள்ளது.
2.மத்தியப் பணியாளர் நலத்துறை அமைச்சகம், வடகிழக்கு பிராந்திய வளர்ச்சி அமைச்சகத்தின் உயரதிகாரிகள் குழு ஜம்மு-காஷ்மீருக்கு செப்டம்பர் 3ஆம் தேதி செல்லவுள்ளனர்.
வர்த்தகம்
1.இந்தியா ரேட்டிங்ஸ், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, நடப்பு நிதியாண்டில், 6.7 சதவீதமாக குறைத்து மதிப்பிட்டுள்ளது. இது, கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத குறைவான வளர்ச்சி விகிதமாகும். இந்நிறுவனம், இதற்கு முன், வளர்ச்சி, 7.3 சதவீதமாக இருக்கும் என்று கணித்திருந்தது. நுகர்வில் சரிவு மற்றும் தொழில் துறை வளர்ச்சியில் ஏற்பட்டிருக்கும் மந்த நிலை காரணமாக, தன் மதிப்பீட்டை தற்போது குறைத்துள்ளது.
2.இந்தியாவில் நடப்பு நிதியாண்டில் பயணிகள் வாகன விற்பனை 4-7 சதவீதம் குறையும் என தரக்குறியீட்டு நிறுவனமான இக்ரா தெரிவித்துள்ளது.
3.மத்திய கலால் மற்றும் சேவை வரி தொடர்பாக, நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு, ஒரு முறை தீர்வு வழங்கும், ‘சுப்கா விஷ்வாஷ்’ திட்டம், டிசம்பர் வரை செயல்பாட்டில் இருக்கும் என, ஜி.எஸ்.டி., அதிகாரிகள்
தெரிவித்துள்ளனர்.
உலகம்
1.புகழ்பெற்ற லண்டன் கிங்ஸ் மருத்துவமனையின் கிளைகளை தமிழகத்தில் தொடங்குவதற்கான ஒப்பந்தம் உள்பட 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி முன்னிலையில் லண்டனில் கையெழுத்தாகின.
2.அமேசான் காட்டுத் தீ குறித்து விவாதிப்பதற்காக சர்வதேச நாடுகளின் அவசரக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று ஐ.நா. பொதுச் செயலர் அன்டோனியோ குட்டெரெஸ் வலியுறுத்தியுள்ளார்.
விளையாட்டு
1.ஐஎஸ்எஸ்எப் உலக துப்பாக்கி சுடும் போட்டியில் முதல் தங்கப் பதக்கத்தை வென்றார் தமிழகத்தின் இளவேனில் வாலறிவன்.பிரேசில் தலைநகர் ரியோடி ஜெனிரோவில் நடைபெறும் இப்போட்டியில் புதன்கிழமை நள்ளிரவு மகளிர் 10 மீ. ஏர்ரைபிள் பிரிவு இறுதிச் சுற்று நடைபெற்றது. இதில் இந்திய நட்சத்திர வீராங்கனை இளவேனில் வாலறிவன் 251.7 புள்ளிகள் சுட்டு தங்கப் பதக்கத்தை வென்றார். சீனியர் பிரிவில் இளவேனில் வெல்லும் முதல் தங்கம் இதுவாகும்.
2.தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு வியாழக்கிழமை நடைபெற்ற கண்கவர் விழாவில் மாற்றுத் திறனாளி வீராங்கனை தீபா மாலிக்குக்கு ராஜீவ் கேல் ரத்னா விருது உள்பட பல்வேறு வீரர்கள், பயிற்சியாளர்களுக்கு அர்ஜுனா, துரோணாச்சார்யா விருதுகளை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.
3.யுஎஸ் ஓபன் போட்டியின் 3-ஆவது சுற்றுக்கு முன்னணி வீராங்கனை ஆஷ்லி பர்டி தகுதி பெற்றுள்ளார்.
பிரெஞ்சு ஓபன் சாம்பியன் ஆஷ்லி பர்டி 6-2, 7-6 என்ற நேர் செட்களில் அமெரிக்காவின் லாரன் டேவிஸை வீழ்த்தினார்.
மற்றொரு ஆட்டத்தில் செரீனா வில்லியம்ஸ் 5-7, 6-3, 6-1 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் கேத்தி மெக்நல்லியிடம் வென்றார்.
இன்றைய தினம்
- சர்வதேச காணாமல் போனோர் தினம்
- ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ண் நகரம் அமைக்கப்பட்டது(1835)
- பிரபல நகைச்சுவை நடிகர் என்.எஸ்.கிருஷ்ணன் இறந்த தினம்(1957)
- இந்திய தொழிலதிபர் கே.கே.பிர்லா இறந்த தினம்(2008)
– தென்னகம்.காம் செய்தி குழு