Current Affairs – 30 August 2018
தமிழகம்
1.தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் பணிபுரியும் அரசு ஊழியர்கள் அனைவரும் கட்டாயம் அடையாள அட்டையை அணிய வேண்டும் என தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
2.எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை கன்னியாகுமரியில் வரும் செப்டம்பர் 22 -ஆம் தேதியும், அதன் நிறைவு விழாவை சென்னையில் செப்டம்பர் 30 -ஆம் தேதியும் நடத்துவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியா
1.ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்கு பிறகு 99.3 சதவீத பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் வங்கிகளுக்கு திரும்பி வந்துவிட்டன என்று இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) புதன்கிழமை தெரிவித்துள்ளது.ரூ.15.41 லட்சம் கோடி ரூ.500, ரூ.1000 நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. அவற்றில் ரூ.15.31 லட்சம் கோடி நோட்டுகள் வங்கிகளுக்கு வந்துவிட்டன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ.10,720 கோடி மதிப்பிலான பழைய ரூபாய் நோட்டுகள் மட்டுமே வங்கிகளுக்கு திரும்பவில்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2.பதினான்கு நாள்களுக்குப் பிறகு கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் புதன்கிழமை மீண்டும் பயணிகள் போக்குவரத்து சேவை தொடங்கியது.
வர்த்தகம்
1.புதிய கார், இருசக்கர வாகனம் ஆகியவற்றுக்கு, கட்டாயம் நீண்ட கால மூன்றாம் நபர் வாகன காப்பீடு எடுக்கும் விதிமுறை, செப்., 1ல் அமலுக்கு வருகிறது.
2.நடப்பு நிதியாண்டில், ஜி.டி.பி., எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி, 7.4 சதவீதமாக வளர்ச்சி காணும் என, ரிசர்வ் வங்கி மதிப்பிட்டு உள்ளது.
3.சர்வதேச அன்னிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவிற்கு 70.59 ஆக சரிந்துள்ளது.
உலகம்
1.அமெரிக்காவில் “பிரீமியம்’ நடைமுறையில் “ஹெச்1பி’ விசா வழங்குவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடைக்காலம் மேலும் நீட்டிக்கப்படுவதாக, அந்த நாட்டின் குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.
2.இந்தியா-பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே பாயும் சிந்து நதி நீரைப் பகிர்ந்து கொள்வது தொடர்பாக, இரு நாடுகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தை புதன்கிழமை தொடங்கியது.
விளையாட்டு
1.ஆசியப் போட்டி தடகளத்தின் ஒரு பகுதியாக புதன்கிழமை மும்முறை தாண்டுதலில் இந்திய வீரர் அர்பிந்தர் சிங் தங்கப் பதக்கம் வென்றார்.
மகளிர் ஹெப்டதலானில் ஸ்வப்னா பர்மன் தங்கம் வென்றார்.
மகளிர் 200 மீ. ஓட்டத்தில் இந்திய வீராங்கனை டுட்டி சந்த் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
ஆசியப் போட்டி மகளிர் ஹாக்கி இறுதிச் சுற்றுக்கு இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் சீனாவை வென்று தகுதி பெற்றுள்ளது.
இன்றைய தினம்
- சர்வதேச காணாமல் போனோர் தினம்
- ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ண் நகரம் அமைக்கப்பட்டது(1835)
- பிரபல நகைச்சுவை நடிகர் என்.எஸ்.கிருஷ்ணன் இறந்த தினம்(1957)
- தென்னகம்.காம் செய்தி குழு