தமிழகம்

1. உழைப்பாளர் தினத்தையொட்டி, விழுப்புரத்தில் 12 அடி நீள தூரிகையால் ஓவியங்கள் வரைந்து மாணவ, மாணவிகள் உலக சாதனை படைத்தனர்.


இந்தியா

1.மக்களவைக்கு 4-ஆவது கட்டமாக, மகாராஷ்டிரம், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம் உள்பட 9 மாநிலங்களில் உள்ள 72 தொகுதிகளில் திங்கள்கிழமை வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், மொத்தம் 64 சதவீத வாக்குகள் பதிவாகின.


வர்த்தகம்

1.ஒரு வங்கியில் கடன் பெற்ற நிறுவனம், அவ்வங்கிக்கு தெரியாமல் வேறொரு வங்கி கணக்கு மூலம், நிதி பரிவர்த்தனையில் ஈடுபடுவதை தடுக்க, நடப்பு கணக்கு தொடர்பான விதிமுறைகளை, ரிசர்வ் வங்கி கடுமையாக்க உள்ளது.


உலகம்

1.ஸ்பெயின் நாடாளுமன்றத்துக்கு நடைபெற்ற தேர்தலில், பிரதமர் பெட்ரோ சான்ஷெஸ் தலைமையிலான சோஷலிஸ்ட் தொழிலாளர் கட்சி அதிக தொகுதிகளைக் கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளது.

2.கிர்கிஸ்தானில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் மாநாட்டில் இந்தியா சார்பில் அத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்றார்.


விளையாட்டு

1.ராஜீவ் கேல் ரத்னா, அர்ஜுனா விருதுகளுக்கு வீரர்களின் பெயர்களை பல்வேறு விளையாட்டு சம்மேளனங்கள் பரிந்துரைத்துள்ளன.
இந்திய மல்யுத்த சம்மேளனம் சார்பில் ஆசிய சாம்பியன் பஜ்ரங் புனியா, ஆசிய போட்டி சாம்பியன் வினேஷ் போகட் ஆகியோரது பெயர்கள் ராஜீவ் கேல் ரத்னா விருதுக்கும், ராகுல் அவாரே, ஹர்ப்ரீத் சிங், திவ்யா காகரன், பூஜா திண்டா ஆகியோரது பெயர்கள் அர்ஜுனா விருதுகளுக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.


ன்றைய தினம்

  • ஜெர்மனி தந்தையர் தினம்
  • வியட்நாம் விடுதலை தினம்(1975)
  • இந்திய திரைப்படத் துறையின் முன்னோடியான தாதாசாஹிப் பால்கே பிறந்த தினம்(1870)
  • திருச்சியில் பாரதிதாசன் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது(1982)
  • ஆசியான் அமைப்பில் கம்போடியா இணைந்தது(1999)

– தென்னகம்.காம் செய்தி குழு