தமிழகம்

1.மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள குடியரசுத் தலைவர் விருதுக்கான அறிவிப்பில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளது

2.கோவை கண்ணதாசன் கழகம் சார்பில் 2018 -ஆம் ஆண்டுக்கான “கண்ணதாசன் விருது’ , திரைப்பட பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், எழுத்தாளர் மாலன் ஆகியோருக்கு வழங்கப்பட உள்ளது.

3.தமிழகம் முழுவதும் உள்ள பதிப்பாளர்களின் விற்பனையை மேம்படுத்த அவர்களது பதிப்பகங்களை இணைய வர்த்தகம் மூலம் ஒருங்கிணைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் கூறினார்.


இந்தியா

1.அரசு சாரா தொண்டு நிறுவனங்கள், பிரதான கல்வி நிறுவனங்கள் உள்பட நாடெங்கிலும் 3,292 அமைப்புகள், தங்களது வெளிநாட்டு நன்கொடைக்கான வருடாந்திர செலவு கணக்கு விவரங்களை தாக்கல் செய்யவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

2.மகாராஷ்டிர தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (என்சிபி) புதிய தலைவராக ஜெயந்த் பாட்டீல் நியமிக்கப்பட்டுள்ளார்.

3.இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக எஸ்.சுதாகர் ரெட்டி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

4.நாடு முழுவதும் மே மாதத்தில் 650 அஞ்சலக பேமண்ட் வங்கிக் கிளைகள் தொடங்கப்படும் என்று மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் மனோஜ் சின்ஹா தெரிவித்தார்.


வர்த்தகம்

1.மாருதி சுஸுகி இந்தியா நிறுவனத்தின் நான்காம் காலாண்டு நிகர லாபம் ரூ.1,882.1 கோடியாக அதிகரித்துள்ளது.


உலகம்

1.காலவரையின்றி முழுவதும் மறுசுழற்சி செய்யக்கூடிய வகையிலான புதிய பிளாஸ்டிக்கை கண்டுபிடித்து அமெரிக்க கொலரோடோ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.


விளையாட்டு

1.செர்பியாவில் நடைபெற்ற சர்வதேச குத்துச்சண்டைப் போட்டியில் இந்தியாவின் சுமித் சங்வான், ஹிமான்ஷு சர்மா, நிகத் ஜரீன் ஆகியோர் தங்கப் பதக்கம் வென்றனர்.

2.தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியானது மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவிலிருந்து, அஸ்ஸாம் மாநிலம் குவாஹாட்டிக்கு மாற்றப்பட்டுள்ளது.

3.ஐஸ்லாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பை சாட்டிலைட் வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக வீராங்கனை பவானி தேவி வெள்ளிப் பதக்கம் வென்றார்.


ன்றைய தினம்

1. வியட்நாம் – விடுதலை நாள் (1975)

–தென்னகம்.காம் செய்தி குழு