தமிழகம்

1.தமிழகத்தில் 27 மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம் சரிந்துள்ளதாக பொதுப்பணித் துறை ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.நாகப்பட்டினம், ராமநாதபுரம், திருப்பூர், தேனி ஆகிய மாவட்டங்களில் மட்டுமே, முந்தைய ஆண்டு, ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்தாண்டு நிலத்தடி நீர்மட்டம் சிறிதளவு உயர்ந்துள்ளது.


இந்தியா

1.சந்திரயான்-2 விண்கலத்திலிருந்து லேண்டர் பகுதியை இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்டபடி திங்கள்கிழமை வெற்றிகரமாகப் பிரித்தனர்.இப்போது விண்கலத்தின் ஆர்பிட்டர் பகுதி தனியாகவும், லேண்டர் பகுதி தனியாகவும் நிலவைச் சுற்றி வருகின்றன. அடுத்த நான்கு நாள்களில் லேண்டர் விக்ரம் நிலவில் தரையிறங்க உள்ளது.

2.சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்து வரும் வி.கே.தஹில ராமாணீயை மேகாலயா மாநில தலைமை நீதிபதியாக மாற்ற உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.


வர்த்தகம்

1.முக்கிய எட்டு துறைகளின் உற்பத்தி வளர்ச்சி சென்ற ஜூலை மாதத்தில் 2.1 சதவீதமாக குறைந்துள்ளது. குறிப்பாக, நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு ஆகியவற்றின் உற்பத்தி வளர்ச்சி பின்னடைவை சந்தித்துள்ளது.நடப்பாண்டு ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான நான்கு மாதங்களில் எட்டு துறைகளின் வளர்ச்சி விகிதம் 3 சதவீதம் என்ற அளவில் உள்ளது. கடந்தாண்டு இதே கால அளவில் காணப்பட்ட வளர்ச்சியான 5.9 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் இது பாதி அளவு குறைவாகும்.
எட்டு துறைகளின் உற்பத்தி வளர்ச்சி விகிதம் நடப்பாண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து சரிவடைந்து வருகிறது. ஏப்ரலில் இதன் வளர்ச்சி விகிதம் 5.8 சதவீதத்திலிருந்து 5.2 சதவீதமாக குறைந்தது. மேலும் இது, மே மாதத்தில் 4.3 சதவீதமாகவும், ஜூன் மாதத்தில் 0.7 சதவீதமாகவும் சரிந்தது என மத்திய அரசு அந்தப் புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது.

2.மோட்டார் வாகன விற்பனையில் முதலிடத்தில் உள்ள மாருதி சுஸுகியின் ஆகஸ்ட் மாத வாகன விற்பனை 33 சதவீதம் சரிந்து 1,06,413-ஆனது. மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் ஆகஸ்ட் மாத விற்பனை 48,324 என்ற எண்ணிக்கையிலிருந்து சரிந்து 36,085-ஆகியுள்ளது.டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வாகன விற்பனையும் 58 சதவீதம் அளவுக்கு வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. ஹோண்டா கார் உள்நாட்டு சந்தை விற்பனையும் 17,020 என்ற எண்ணிக்கையிலிருந்து 8,291-ஆக வீழ்ச்சியடைந்துள்ளது.
ஹுண்டாய் நிறுவனத்தின் ஆகஸ்ட் மாத வாகன விற்பனை 16.58 சதவீதம் சரிந்து 38,205-ஆகவும்  இருந்தன.

3.கடந்தாண்டு ஜூலையில் இந்திய நிறுவனங்கள் 218 கோடி டாலர் மதிப்பிலான கடன்களை திரட்டியிருந்தன. நடப்பாண்டு ஜூலையில் இது இருமடங்கு அதிகரித்து 498 கோடி டாலரை எட்டியுள்ளது.

4.நாட்டின், தயாரிப்பு துறை உற்பத்தி வளர்ச்சி, ஆகஸ்ட் மாதத்தில், 15 மாதங்களில் இல்லாத வகையில், சரிவை சந்தித்துள்ளது.விற்பனை, உற்பத்தி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் ஏற்பட்டிருக்கும் மந்த நிலையால், நாட்டின் தயாரிப்பு துறை உற்பத்தி வளர்ச்சி, ஆகஸ்ட் மாதத்தில், சரிவை சந்தித்துள்ளது.
பிரிட்டனைச் சேர்ந்த, ‘ஐ.எச்.எஸ்., மார்கிட்’ எனும் நிறுவனம், உலோகம், ரசாயனம், காகிதம், உணவு, ஜவுளி உள்ளிட்ட எட்டு பிரிவுகளைச் சேர்ந்த நிறுவனங்களின், ஆகஸ்ட் மாத தயாரிப்பு நிலவரம் குறித்து ஆய்வு நடத்தி, அறிக்கையை வெளியிட்டுள்ளது.அதில் கூறப்பட்டுஉள்ளதாவது:ஆகஸ்ட் மாதத்தில், தயாரிப்பு துறையின் உற்பத்தி வளர்ச்சி குறித்த, பி.எம்.ஐ., குறியீடு, 51.4 புள்ளிகளாக சரிந்துள்ளது.
இது, 2018, மே மாதத்துக்குப் பிறகு ஏற்பட்ட குறைந்த அளவாகும்.


உலகம்

1.பிரதமர் நரேந்திர மோடி வரும் 4, 5-ஆம் தேதிகளில் ரஷ்யா செல்வதாகவும், அங்கு அதிபர் விளாதிமீர் புதினுடன் இந்தியா-ரஷியா இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சு நடத்த இருப்பதாகவும் வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

2.அரசு முறைப் பயணமாக ஜப்பான் சென்றுள்ள பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அந்நாட்டு பிரதமர் ஷின்ஸோ அபேவை  சந்தித்து இருதரப்பு பாதுகாப்பு உறவை மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.


விளையாட்டு

1.யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டி 4-ஆவது சுற்றில் காயத்தால் வெளியேறினார் நடப்பு சாம்பியன் ஜோகோவிச். மகளிர் பிரிவில் 5-ஆம் நிலை வீராங்கனை உக்ரைன் எலினா விட்டோலினா 7-5, 6-4 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் மடிஸன் கீஸை வென்று காலிறுதிக்கு தகுதி பெற்றார். செரீனா வில்லியம்ஸ் 6-3, 6-4 என குரோஷியாவின் பெட்ரா மார்டிக்கையும், சீனாவின் வாங் குயாங் 6-2, 6-4 என ஆஸி.யின் ஆஷ்லி பர்டியையும், பிரிட்டனின் ஜோஹன்னா கொண்டா 6-7, 6-3, 7-5 என பிளிஸ்கோவாவையும் வென்று காலிறுதிக்கு தகுதி பெற்றனர்.


ன்றைய தினம்

  • ஆஸ்திரேலிய கொடி நாள்
  • கத்தார் விடுதலை தினம்(1971)
  • சீனா ராணுவ படை தினம்
  • உலகின் மிகச் சிறிய நாடான சான் மரீனோ, புனித மரீனசினால் உருவாக்கப்பட்டது(301)

– தென்னகம்.காம் செய்தி குழு