தமிழகம்

1.போக்குவரத்து வசதி குறைவாகவும், 10 கி.மீ.க்கு மேல் பயணம் செய்து தேர்வெழுத வேண்டிய கட்டாயத்தில் உள்ள மாணவர்கள் படிக்கும் பள்ளிகளிலும், புதிய தேர்வு மையங்களை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்வித் துறை அதிகாரிகளுக்கு அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

2.ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பெண்கள் ஸ்குவாஷ் குழுப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ள தமிழக வீராங்கனைகள் மூவருக்கு தலா ரூ. 30 லட்சம் ஊக்கப் பரிசை தமிழக அரசு அறிவித்துள்ளது.


இந்தியா

1.இந்தியாவில் நேரடி அன்னிய முதலீடு செய்துள்ள நாடுகளின் வரிசையில், மோரீஷஸ் நாடு மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது.

2.எல்லைத் தொடர்பான பல்வேறு விவகாரங்கள் குறித்து, தில்லியில் இந்தியா, வங்கதேச எல்லைப் பாதுகாப்புப் படை குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.


வர்த்தகம்

1.டிஜிட்­டல் பண பரி­வர்த்­த­னை­க­ளுக்­கான புகார்­களை கவ­னிக்க, நடு­நி­லை­யா­ளரை நிய­மிப்­பதை, ரிசர்வ் வங்கி பரி­சீ­லித்து வரு­கிறது.


உலகம்

1.பாகிஸ்தானின் பாதுகாப்புக்கு அளிக்க திட்டமிடப்பட்டிருந்த ரூ.2,130 கோடி நிதியை (300 மில்லியன் டாலர்) ரத்து செய்வதென்று அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

2.அரசு முறைப் பயணமாக, 3 ஐரோப்பிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், ஞாயிற்றுக்கிழமை சைப்ரஸ் நாட்டை வந்தடைந்தார்.


விளையாட்டு

1.இந்தோனேஷியாவில் கடந்த மாதம் 18-ஆம் தேதி தொடங்கி 16 நாள்கள் நடைபெற்ற 18-ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைந்தன.
இதில் 58 விளையாட்டுகளில் பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. மொத்தம் 45 நாடுகளைச் சேர்ந்த சுமார் 11,000 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றிருந்தனர்.
பதக்கப் பட்டியலில் சீனா 132 தங்கம், 92 வெள்ளி, 65 வெண்கலம் என மொத்தம் 289 பதக்கங்களுடன் முதலிடம் பிடித்தது. ஜப்பான் (75 தங்கம், 56 வெள்ளி, 74 வெண்கலம், மொத்தம் 205) 2-ஆம் இடத்தையும், தென் கொரியா (49 தங்கம், 58 வெள்ளி, 70 வெண்கலம், மொத்தம் 177) 3-ஆம் இடத்தையும் பிடித்தன. போட்டியை நடத்திய இந்தோனேஷியா 31 தங்கம், 24 வெள்ளி, 43 வெண்கலம் என 98 பதக்கங்களுடன் 4-ஆம் இடம் பிடித்தது.
பதக்கப்பட்டியலில் சிரியா ஒரே ஒரு வெண்கலப் பதக்கத்துடன் கடைசி இடத்தை (37) பிடித்தது.
இந்தியா, 15 தங்கம், 24 வெள்ளி, 30 வெண்கலம் என 69 பதக்கங்களுடன் பட்டியலில் 8-ஆவது இடத்தை தக்க வைத்துக் கொண்டது.

2.தென் கொரியாவில் நடைபெறும் 52-ஆவது ஐஎஸ்எஸ்எஃப் உலக துப்பாக்கி சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் ஜூனியர் பிரிவில் இந்தியாவுக்கு ஞாயிற்றுக்கிழமை 2 தங்கப் பதக்கங்கள் கிடைத்தன.


ன்றைய தினம்

  • ஆஸ்திரேலிய கொடி நாள்
  • கத்தார் விடுதலை தினம்(1971)
  • சீனா ராணுவ படை தினம்
  • உலகின் மிகச் சிறிய நாடான சான் மரீனோ, புனித மரீனசினால் உருவாக்கப்பட்டது(301)
  • தென்னகம்.காம் செய்தி குழு