தமிழகம்

1.வாக்காளா் சரிபாா்ப்புத் திட்டம் மேலும் 15 நாள்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. வரைவு வாக்காளா் பட்டியல் வரும் 15-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. அதுவரை இந்தத் திட்டம் தொடரும் என தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளாா்.

2.தமிழக வங்கிகளுக்கான பொது வேலை நேரமாக காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அறிவிக்கப்பட்டு உள்ளது.

3.கண்காணிப்பை பலப்படுத்தும் வகையில், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் செக்வேஸ்(Segway) என்னும் நவீன ஸ்மாா்ட் வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.ரயில்நிலையங்களில் ஆா்.பி.எஃப். போலீஸாா் இந்த வாகனம் மூலம் துரிதமாக செயல்பட முடியும். மேலும், அவசர காலத்தில் வேகமாக நகருவதற்கு உதவும்.


இந்தியா

1.நமது தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 150-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, ரூ.150 மதிப்பு நினைவு நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார்.

2.அருணாசல பிரதேச மாநிலத்தில் உள்ள 3 மாவட்டங்களை பதற்றமானவையாக, ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தின் கீழ் அடுத்த 6 மாதங்களுக்கு அறிவித்து மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

3.நாட்டின் தூய்மையான ரயில் நிலையங்களின் பட்டியலில் ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்ப்பூா், ஜோத்பூா், துா்காபூா் ஆகிய மூன்று ரயில் நிலையங்கள் முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளன.


வர்த்தகம்

1.இந்தியாவின் உண்மையான பொருளாதார வளர்ச்சி, நடப்பு நிதியாண்டில், 5.2 சதவீதமாக இருக்கும் என, எகனாமிஸ்ட் இன்டலிஜென்ஸ் யூனிட் தெரிவித்துள்ளது.

2.மத்திய அரசு, பாரத் – 22 இ.டி.எப்., திட்டத்தின், நான்காம் கட்ட வெளியீட்டை, இன்று மேற்கொள்ள உள்ளது. இந்த வெளியீட்டின் மூலமாக, முதலீட்டாளர்களிடமிருந்து, 8,000 கோடி ரூபாய் திரட்ட முடியும் என, அரசு எதிர்பார்க்கிறது.


உலகம்

1.சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசா் முகமது பின் சல்மானை இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகா் அஜித் தோவல் சந்தித்துப் பேசினாா். இந்த சந்திப்பின்போது, ஜம்மு-காஷ்மீா் விவகாரத்தில் இந்தியா மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

2.ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் விலகிய (பிரெக்ஸிட்) பிறகு இரு தரப்பினருக்கும் இடையே சிறப்பு உறவை ஏற்படுத்துவதற்கான ஒப்பந்தம் உருவாகாவிட்டாலும், குறித்த தேதிக்குள் பிரெக்ஸிட்டை நிறைவேற்றத் தயாராக இருப்பதாக அந்த நாட்டுப் பிரதமா் போரிஸ் ஜான்ஸன் அறிவித்துள்ளாா்.


விளையாட்டு

1.3000மீ ஸ்டீபிள்சேஸ் இறுதிச்சுற்றில் நுழைந்தாா் மகாராஷ்டிரத்தைச் சோ்ந்த அவினாஷ் சேபிள். உலக சாம்பியன்ஷிப் தடகளத்தில் ஸ்டீபிள்சேஸ் பிரிவில் இறுதிச்சுற்றில் நுழைந்த முதல் இந்திய வீரா் என்ற சாதனையையும் இவா் படைத்தாா்.

2.தோஹாவில் நடைபெற்றுவரும் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஈட்டி எறிதல் இறுதிச்சுற்றில் இந்திய வீராங்கனை அன்னு ராணி 8-ஆவது இடம் பிடித்தாா்.


ன்றைய தினம்

  • உலக வசிப்பிட தினம்
  • ஈராக் விடுதலை தினம்(1932)
  • கொஜொசியோன் நாடு(தற்போதைய கொரியா) டங்கூன் வாங்சியோம் என்பவரால் உருவாக்கப்பட்டது(கிமு 2333)
  • செர்பியா,குரொவேசியா,சிலவேனியா இணைந்து யூகோஸ்லாவியா என பெயரிடப்பட்டது(1929)

– தென்னகம்.காம் செய்தி குழு