தமிழகம்

1.கடந்த 2008-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட தொழிலக வேலைவாய்ப்புச் சட்டத்தை அமல்படுத்த கால அவகாசம் வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்மனு தாக்கல் செய்துள்ளது.

2.பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன்காந்தி, 53 நாள்களுக்குப் பிறகு  பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.


இந்தியா

1.அதிநவீன எஸ்-400 டிரையம்ப் ரக ஏவுகணைகளை ரூ.40 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் ரஷ்யாவிடம் இருந்து கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தம் இந்த வாரம் கையெழுத்தாக உள்ளது.

2.கடந்த 4 நிதியாண்டுகளில், எம்.பி.க்களுக்கு ஊதியம், சலுகையாக ரூ.1997 கோடி அளிக்கப்பட்டிருப்பது தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் அளிக்கப்பட்டுள்ள பதில் மூலம் தெரிய வந்துள்ளது.


வர்த்தகம்

1.காப்பீட்டு தரகு துறையில் 100 சதவீத அந்நிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி அளிப்பது குறித்து மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது.


உலகம்

1.அமெரிக்காவைச் சேர்ந்த ஆர்தர் ஆஷ்கின், பிரான்ஸைச் சேர்ந்த ஜெனார்டு மோரூ, கனடாவைச் சேர்ந்த டோனா ஸ்ட்ரிக்லாண்ட் ஆகிய அந்த மூவரும், லேசர் சிகிச்சைகளுக்குப் பயன்படும் ஒளியியல் (ஆப்டிகல்) லேசர்களைக் கண்டுபிடித்தமைக்காக அவர்களுக்கு இந்தப் பரிசு வழங்கப்படுவதாக நோபல் தேர்வுக் குழு தெரிவித்தது.

2.மகாத்மா காந்திக்கு அமெரிக்காவின் உயரிய விருதான நாடாளுமன்ற தங்கப் பதக்கம் வழங்க வேண்டும் என அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.


விளையாட்டு

1.ஜகார்த்தாவில் நடைபெறவுள்ள ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் இந்திய அணி தமிழக வீரர் தங்கவேலு மாரியப்பன் கொடியேந்தி தலைமை தாங்கிச் செல்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2.ஜகார்த்தாவில் நடைபெறவுள்ள ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் இந்திய அணி தமிழக வீரர் தங்கவேலு மாரியப்பன் கொடியேந்தி தலைமை தாங்கிச் செல்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.


ன்றைய தினம்

  • உலக வசிப்பிட தினம்
  • ஈராக் விடுதலை தினம்(1932)
  • கொஜொசியோன் நாடு(தற்போதைய கொரியா) டங்கூன் வாங்சியோம் என்பவரால் உருவாக்கப்பட்டது(கிமு 2333)
  • செர்பியா,குரொவேசியா,சிலவேனியா இணைந்து யூகோஸ்லாவியா என பெயரிடப்பட்டது(1929)
  • தென்னகம்.காம் செய்தி குழு