தமிழகம்

1.தேசிய வனவிலங்குகள் வாரியத்தின் அனுமதி இல்லாமல் நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

2.சென்னை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக இருந்து வந்த நீதிபதிகள் ஆர்.எம்.டி.டீக்காராமன், என்.சதீஷ்குமார் மற்றும் என்.சேஷசாயி ஆகியோர்  நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்றுக் கொண்டனர்.


இந்தியா

1.கர்நாடகத்தில் சிவமொக்கா, பெல்லாரி, மண்டியா ஆகிய 3 மக்களவைத் தொகுதிகள், ராமநகரம், ஜம்கண்டி ஆகிய 2 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் இன்று நடைபெறுகிறது.

2.அவசர சட்டம் மூலம் நிறுவனங்கள் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


வர்த்தகம்

1.சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் பிரிவில் எளிதாக கடன் பெறுவதற்காக புதிதாக ஒரு போர்டல் தொடங்கப்பட்டுள்ளது. அதன் மூலம், வெறும் 59 நிமிடங்களில் ரூ.1 கோடி வரை கடன் பெறுவதற்கான வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஜிஎஸ்டியில் பதிவு செய்துள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் ஜிஎஸ்டி போர்டல் பிரிவில் பதிவு செய்து கடன் பெறலாம்.


உலகம்

1.இலங்கையில் பரபரப்பான அரசியல் சூழலில், அந்நாட்டு நாடாளுமன்றம் வரும் 7-ஆம் தேதி கூடுவதாக, இலங்கை நாடாளுமன்றத் தலைவர் கரு ஜெயசூர்யா வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

2.இஸ்ரேலுக்கான தங்கள் நாட்டுத் தூதரகத்தை டெல்-அவிவ் நகரிலிருந்து  ஜெருசலேம் நகருக்கு மாற்ற முடிவு செய்துள்ளதாக வெளியான தகவலை, பிரேசிலில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அதிபர் ஜெயிர் பொல்சொனாரோ  உறுதி செய்தார்.


விளையாட்டு

1.பூனேயில் நடைபெற்று வரும் தேசிய சீனியர் ஆடவர் குத்துச்சண்டை சாம்பியன் போட்டியில் நடப்பு சாம்பியன் மணிஷ் கெளஷிக் (60 கிலோ) பிரிவில் இரண்டாவது முறையாக தங்கம் வென்றார். உலக சாம்பியன் போட்டியில் பதக்கம் வென்ற கெளரவ் பிதுரி (56 கிலோ) வெள்ளி வென்றார்.

2.உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீரர் என்ற நிலையை மீண்டும் அடைந்துள்ளார் நோவக் ஜோகோவிச். இதற்கிடையே தனது 100-ஆவது ஏடிபி பட்டத்தை வெல்லும் முனைப்பில் உள்ளார் பெடரர்.


ன்றைய தினம்

  • பனாமா விடுதலை தினம்(1903)
  • பாம்பே டைம்ஸ் முதன் முதலில் வெளியிடப்பட்டது (1838)
  • பாம்பே டைம்ஸ், டைம்ஸ் ஆஃப் இந்தியா எனப் பெயரிடப்பட்டது(1861)
  • அமெரிக்கா, வருமான வரியை அறிமுகப்படுத்தியது(1913)
  • போலந்து, ரஷ்யாவிடம் இருந்து விடுதலை அடைந்தது(1918)
  • தென்னகம்.காம் செய்தி குழு