தமிழகம்

1. நிகழாண்டிலிருந்து பள்ளிகளில் மாணவர்களுக்கு எமிஸ் இணையதளம் மூலம் மட்டுமே மாற்றுச் சான்றிதழ் வழங்க வேண்டும் என பள்ளிக் கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வரமுருகன் உத்தரவிட்டுள்ளார்.

2.பாவேந்தர் பாரதிதாசன் 129-ஆவது பிறந்தநாள் விழா சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில்  கொண்டாடப்பட்டது.


இந்தியா

1.பானி புயல் முன்னெச்சரிக்கையாக, ஒடிஸாவில் கடற்கரையோரத்தில் வசிக்கும் 11.5 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.


வர்த்தகம்

1.மோட்டார் வாகன தேவையில் மந்த நிலை காணப்பட்டதையடுத்து, உள்நாட்டைச் சேர்ந்த டாடா மோட்டார்ஸ், மஹிந்திரா & மஹிந்திரா உள்ளிட்ட பல நிறுவனங்களின் வாகன விற்பனை சரிவடைந்துள்ளன.

2.இந்தியாவில் தங்கத்தின் தேவை நடப்பாண்டின் முதல் காலாண்டில் (ஜனவரி-மார்ச்) 5 சதவீதம் அதிகரித்துள்ளதாக உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது.


உலகம்

1.இஸ்ரோ முன்னாள் தலைவர் ஏ.எஸ். கிரண் குமாருக்கு பிரான்ஸ் அரசு, அந்நாட்டின் உயரிய விருதான செவாலியர் விருதை வழங்கி கெளரவித்துள்ளது.

2.பிரிட்டன் பாதுகாப்புத் துறை அமைச்சர் கேவின் வில்லியம்ஸனை பிரதமர் தெரசா மே  நீக்கியுள்ளார்.


விளையாட்டு

1.நியூஸிலாந்து ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இரண்டாம் நிலை வீரர் டாமி சுகிர்டோவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார் இந்திய வீரர் பிரணாய்.

2.சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பில் வெளியிடப்பட்ட டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகள் தரவரிசைப் பட்டியலில் இந்தியா, இங்கிலாந்து உள்ளிட்டவை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளன.


ன்றைய தினம்

  • சர்வதேச பத்திரிக்கை சுதந்திர தினம்
  • போலந்து அரசியலமைப்பு தினம்
  • ஜப்பான் அரசியலமைப்பு தினம்
  • வாஷிங்டன், டிசி நகரமாக்கப்பட்டது(1802)
  • முதலாவது கிராமி விருதுகள் அறிவிக்கப்பட்டன(1959)

– தென்னகம்.காம் செய்தி குழு