Current Affairs – 3 May 2018
தமிழகம்
1.சென்னை, கவுகாத்தி, லக்னோ ஆகிய நகரங்களில் உள்ள விமான நிலையங்களில் புதிய முனையங்கள் அமைக்க ரூ.5,082 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
2.அரசு கலை-அறிவியல் கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை பட்டப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் திங்கள்கிழமை (மே 7) முதல் தொடங்குகிறது.
இந்தியா
1.புதிய சிம் கார்டு பெறுவதற்கு ஆதார் கட்டாயமில்லை என்றும், வேறு அடையாள ஆவணத்தை பயன்படுத்தியும் சிம் கார்டு பெறலாம் என்றும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
2.மூத்த குடிமக்களுக்கான பிரதம மந்திரி வய வந்தன யோஜனா (பிஎம்விவிஒய்) திட்டத்தில் முதலீடு செய்வதற்கான தொகையை இரு மடங்காக, அதாவது ரூ.15 லட்சமாக அதிகரிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
வர்த்தகம்
1.இந்தியாவில் கடந்த ஐந்து ஆண்டுகளில் பல்வேறு வங்கிகளில் நடைபெற்ற ஊழல்கள் தொடர்பாக 23 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதன் மூலம் ரூ.1 லட்சம் கோடி பணம் முறைகேடு செய்யப்பட்டுள்ளதாகவும் ஆர்.பி.ஐ தெரிவித்துள்ளது.
உலகம்
1.உலக நாடுகள் கடந்த ஆண்டு ராணுவத்துக்காக, 1.739 லட்சம் கோடி டாலர்களை (இந்திய மதிப்பில் சுமார் ரூ.116 லட்சம் கோடி) செலவு செய்துள்ளன. இதில், முதல் ஐந்து நாடுகளில் இந்தியாவும், சீனாவும் இடம்பெற்றுள்ளன.
2.இந்திய ராணுவமும், சீன ராணுவமும் தகவல்களை பகிர்ந்து கொள்ளும் வகையில் அவசர தொலைபேசி (ஹாட்லைன்) இணைப்பை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளதாக சீன அரசின் செய்தி நிறுவனமான ‘குளோபல் டைம்ஸ்’ தெரிவித்துள்ளது.
விளையாட்டு
1.ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை மகளிர் ஹாக்கி போட்டிக்கு இந்திய அணியின் கேப்டனாக தற்காப்பு ஆட்ட வீராங்கனை சுனிதா லக்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.
2.பெடரேஷன் கோப்பை கூடைப்பந்து போட்டிகளில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கேரள மகளிர் அணிகள் வெற்றி பெற்றுள்ளன.
இன்றைய தினம்
- சர்வதேச பத்திரிக்கை சுதந்திர தினம்
- போலந்து அரசியலமைப்பு தினம்
- ஜப்பான் அரசியலமைப்பு தினம்
- வாஷிங்டன், டிசி நகரமாக்கப்பட்டது(1802)
–தென்னகம்.காம் செய்தி குழு