தமிழகம்

1.கோவையில் திங்கள்கிழமை (மார்ச் 4) நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்  வருகிறார்.

2.ஏழைத் தொழிலாளர் குடும்பங்களுக்கான ஒருமுறை சிறப்பு நிதியுதவியான ரூ.2 ஆயிரம் அளிக்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி திங்கள்கிழமை (மார்ச் 4) தொடங்கி வைக்கிறார்.

3.கூடுதல் நிதிச்சுமை ஏற்படும் எனக் கூறி 14 பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள் அரசு கலை அறிவியல் கல்லூரிகளாக மாற்றி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.


இந்தியா

1.இந்தியா- பாகிஸ்தான் இடையிலான சம்ஜெளதா விரைவு ரயில் சேவை ஞாயிற்றுக்கிழமை (3-ஆம் தேதி) முதல் தில்லியில் இருந்து மீண்டும் தொடங்கும் என இந்திய ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.


வர்த்தகம்

1.மத்திய நிதித் துறை முன்னாள் செயலர், அஜய் நாராயண் ஜா, 15வது நிதிக் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

2.சென்னை:சி.ஐ.ஐ., எனப்படும், இந்திய தொழிலக கூட்டமைப்பின், தமிழகப் பிரிவு தலைவராக, ‘டிராக்டர்ஸ் அண்டு பார்ம் எக்யுப்மென்ட்’ நிறுவன தலைவர், எஸ்.சந்திரமோகன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.இவர், 2019 – 20ம் நிதியாண்டு வரை, இப்பொறுப்பை வகிப்பார்.

3.இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு பிப்ரவரி 22-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 39,921 கோடி டாலராக (ரூ.27.94 லட்சம் கோடி) அதிகரித்துள்ளது.


உலகம்

1.அரசியல் பதற்றம் நிலவி வரும் வெனிசூலா மீது அமெரிக்கா கூடுதல் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.

2.அமெரிக்காவின் தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ்-எக்ஸ் தயாரித்துள்ள விண்வெளி வீரர்களை ஏற்றிச் செல்லக் கூடிய டிராகன் விண்கலம், ஃபால்கன்-9 ராக்கெட்டிலிருந்து வெற்றிகரமாகப் பிரிக்கப்பட்டது.


விளையாட்டு

1.நெதர்லாந்தில் நடைபெற்று வரும் டச் ஜூனியர் சர்வதேச பாட்மிண்டன் போட்டியின் நாக் அவுட் சுற்றுக்கு இந்திய வீரர் சாய் சரண் கோயா தகுதி பெற்றுள்ளார்.


ன்றைய தினம்

  • ஜியார்ஜியா அன்னையர் தினம்
  • எகிப்து விளையாட்டு வீரர்கள் தினம்
  • இந்தோ-பாகிஸ்தான் போர் ஆரம்பமானது(1971)
  • போஸ்னியா என்ற நாடு உருவாக்கப்பட்டது(1992)
  • சவுதி அரேபியாவில் எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டது(1938)

– தென்னகம்.காம் செய்தி குழு