தமிழகம்

1.புதுவை மாநில சட்டப்பேரவையின் புதிய தலைவராக வே.பொ.சிவக்கொழுந்துவும், துணைத் தலைவராக எம்.என்.ஆர்.பாலனும் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டனர்.

2.தமிழகத்தில் அரசு பள்ளி வளாகத்தில் உள்ள 2,381 அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி-யுகேஜி வகுப்புகள் திங்கள்கிழமை முதல் தொடங்கவுள்ளன.


இந்தியா

1.சியாச்சின் மற்றும் ஸ்ரீநகர் பகுதிகளில் பாகிஸ்தானுடனான எல்லைப் பகுதிகளில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்ய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்  அங்கு செல்கிறார்.

2.நான்கு ஆண்டுகள் இளங்கலை பட்டப்படிப்பு கொண்டு வருவது தொடர்பாக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.

3.மத்திய தகவல் ஆணையத்தில் 4 தகவல் ஆணையர்களை நியமிப்பது தொடர்பாக நடைபெற்ற விவாதங்கள் அடங்கிய ஆவணங்களை வெளியிட மத்திய அரசு மறுத்துவிட்டது.

4.வரும் 2020-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவிலுள்ள 84 விமான நிலையங்களில் அதிநவீன “ஸ்கேனர்’ சோதனைக் கருவியைப் பொருத்த வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.


வர்த்தகம்

1. வங்கி சாரா நிதி நிறுவனமான சுந்தரம் பைனான்ஸ் மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நான்காவது காலாண்டில் ரூ.675 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.


உலகம்

1.இலங்கையில் வரும் நவம்பர் மாதம் 15-ஆம் தேதியிலிருந்து டிசம்பர் மாதம் 7-ஆம் தேதிக்குள் அதிபர் தேர்தல் நடத்தப்படும் என்று அந்த நாட்டு தேர்தல் ஆணையம் தெரிவித்தது.


விளையாட்டு

1.மாட்ரிட்டில்  நடைபெற்ற சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டி இறுதிச் சுற்றில் வென்று புதிய சாம்பியன் ஆனது லிவர்பூல் அணி.

2.கஜகஸ்தானில் நடைபெற்ற 20 வயதுக்கு உள்பட்டோருக்கான தடகளப் போட்டியில் குன்னூரைச் சேர்ந்த தடகள வீரர் ஸ்ரீகிரண் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

3.பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி காலிறுதிச் சுற்றுக்கு முன்னணி வீரர்கள் ரபேல் நடால், ரோஜர் பெடரர், வாவ்ரிங்கா தகுதி பெற்றுள்ளனர்.

4.கேன்டர் பிட்ஸ்ஜெரால்ட் 21 வயதுக்குட்பட்டோர் சர்வதேச மகளிர் ஹாக்கி போட்டியில் இந்தியா தனது 2-ஆவது வெற்றியைப் பதிவு செய்துள்ளது.


ன்றைய தினம்

  • திமுக தலைவர் கருணாநிதி பிறந்த தினம்(1924)
  • நாசாவின் ஜெமினி 4 விண்கலம் ஏவப்பட்டது(1965)
  • மொண்டெனேகுரோ நாடு, செர்பியா-மொண்டெனேகுரோ கூட்டமைப்பில் இருந்து பிரிந்தது(2006)
  • அறிவியலாளர் வில்லியம் ஹார்வி இறந்த தினம்(1657)

– தென்னகம்.காம் செய்தி குழு