Current Affairs – 3 June 2018
தமிழகம்
1.வாகனப் பதிவு தொடர்புடைய அனைத்து நடைமுறைகளும் முழுமையாக இணையவழியில் மாற்றப்படவுள்ளது. தமிழகம் முழுவதும் 15 வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் இதற்கான சோதனை முயற்சி நடைபெற்று வருகிறது.
2.அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக பேராசிரியர் வி.முருகேசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தியா
1.நாட்டின் முதல் தேசிய விளையாட்டு பல்கலைக்கழகத்தை மணிப்பூரில் அமைப்பதற்கு இயற்றப்பட்ட அவசரச் சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார்.
2.பிரிக்ஸ், இப்ஸா நாடுகளின் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக, வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், 5 நாள் பயணமாக சனிக்கிழமை தென்ஆப்பிரிக்கா சென்றார்.
வர்த்தகம்
1.தமிழகத்துக்குள், ஒரு லட்சம் ரூபாய் வரை மதிப்பு கொண்ட பொருட்களை கொண்டு செல்ல, ‘இ – வே’ பில் பெற வேண்டாம்’ என, தமிழக அரசு தெரிவித்துள்ளது.
2.கடந்த மே மாதம், ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி வாயிலான வசூல், 94,016 கோடி ரூபாயாக குறைந்து உள்ளது.இது, ஏப்ரலில், 1,03 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.
உலகம்
1.ஸ்பெயின் புதிய பிரதமராக பெட்ரோ சன்ஷெஸ் பதவியேற்றுக் கொண்டார்.
2.சீனா, கோஃபென்-6 எனப்படும் புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.
விளையாட்டு
1.உலகக் கோப்பை 2018 போட்டிக்கு முதன்முறையாக தகுதி பெறாத நிலைக்கு நான்கு முறை சாம்பியனான இத்தாலி தள்ளப்பட்டுள்ளது.அதே போல் நெதர்லாந்து, அமெரிக்கா, கானா போன்ற நாடுகளும் தகுதி பெறவில்லை. ஐஸ்லாந்து, பனாமா நாடுகள் முதன்முறையாக தகுதி பெற்றுள்ளன.
2.பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி நான்காம் சுற்றுக்கு முன்னாள் சாம்பியன்கள் முகுருஸா, மரியா ஷரபோவா ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.
இன்றைய தினம்
- திமுக தலைவர் கருணாநிதி பிறந்த தினம்(1924)
- நாசாவின் ஜெமினி 4 விண்கலம் ஏவப்பட்டது(1965)
- மொண்டெனேகுரோ நாடு, செர்பியா-மொண்டெனேகுரோ கூட்டமைப்பில் இருந்து பிரிந்தது(2006)
- அறிவியலாளர் வில்லியம் ஹார்வி இறந்த தினம்(1657)
–தென்னகம்.காம் செய்தி குழு