தமிழகம்

1.ஓடும் ரயில்களில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் இருப்பதை உறுதி செய்யவும், அவர்களைக் கண்காணிக்கவும் இ- பீட் என்றும் செல்லிடப்பேசி செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

2.தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் எப்போது நடத்தப்படும் என்ற தகவலை பிரமாணப் பத்திரத்தின் மூலம் தெரிவிக்க தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

3.சொற்குவைத் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட சொற்கள், அடுத்த இரண்டு நாள்களில் மக்களின் பயன்பாட்டுக்கு வரும் என்று தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் தெரிவித்தார். தமிழில் புதிய சொற்களை உருவாக்க சொற்குவைத் திட்டம் உருவாக்கப்பட்டு ரூ.1 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. தமிழில் 4 லட்சத்து ஆயிரத்து 931 சொற்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

ஆங்கிலத்தில் ஆக்ஸ்போர்டு அகராதியில் 1 லட்சத்து 71 ஆயிரத்து 471 சொற்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. ஆங்கிலத்தைவிட தமிழில் இருமடங்குக்கு மேலாக தனித்துவம் பெற்ற சொற்கள் உள்ளன.
பிரிட்டானியா தேசிய தரவகத்தின் வடிவத்தைப் போன்றே சொற்குவைத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.


இந்தியா

1.தமிழகம் உள்ளிட்ட 6 மாநில அரசுகளின் 7 மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.
ஆந்திர அரசின் 2 மசோதாக்கள், தமிழகம், திரிபுரா, ராஜஸ்தான், ஜார்க்கண்ட், பிகார் ஆகிய மாநில அரசுகளின் தலா ஒரு மசோதா ஆகியவற்றுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

2.வங்கியில் இருந்து ரூ.1 லட்சத்துக்கும் மேல் கடன் வாங்கி மோசடியில் ஈடுபட்டவர்களின் எண்ணிக்கை 2018-19ஆம் ஆண்டில் 6,735-ஆக குறைந்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.


வர்த்தகம்

1. பொதுத் துறையைச் சேர்ந்த பொறியியல் நிறுவனமான பிஎச்இஎல்-ன் தலைவராக நலின் சிங்கால் நியமிக்கப்பட்டுள்ளார்.

2.வேளாண் ஏற்றுமதியை ஊக்குவிக்க தனி அமைப்பை உருவாக்கப்பட்டுள்ளதாக மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.

3.புதிய வெளிநாட்டு வர்த்தக கொள்கை குறித்து, சம்பந்தப்பட்ட அனைவரது கருத்துகளையும், மத்திய வர்த்தக துறை அமைச்சகம் கேட்டுள்ளது.


உலகம்

1.நேட்டோ உறுப்பு நாடுகளுக்கு இணையான அங்கீகாரத்தை இந்தியாவுக்கு அளிக்கும் வகையிலான மசோதாவுக்கு அமெரிக்க செனட் சபை ஒப்புதல் வழங்கியுள்ளது.

2.வர்த்தகப் போர் பதற்றத்தைத் தணிப்பதற்கான பேச்சுவார்த்தை சீனாவுடன் தொடங்கிவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.


விளையாட்டு

1.வங்கதேசத்தை 28 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2019 ஒருநாள் உலகக் கோப்பை அரையிறுதிக்கு தகுதி பெற்ற 2-ஆவது அணி என்ற சிறப்பை பெற்றது இந்தியா.

2.ஓரே உலகக் கோப்பை போட்டியில் 4 சதங்கள் குவித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார் ரோஹித் சர்மா.

3.உலகக் கோப்பை வரலாற்றில் ஒரு தொடரில் 500 ரன்கள் குவித்து, 10 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையை ஷாகிப் அல் ஹசன் படைத்துள்ளார்.

4.நேரு பூங்கா விளையாட்டு வளாகத்தில் ரூ.8.25 கோடி செலவில் செயற்கை இழை தடகள ஓடுபாதை அமைக்கப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவித்தார்.


ன்றைய தினம்

  • மியான்மர் பெண்கள் தினம்
  • பெலரஸ் விடுதலை தினம்(1944)
  • க்யூபெக் நகரம் உருவாக்கப்பட்டது(1608)
  • அமெரிக்காவின் முதல் சேமிப்பு வங்கி நியூயார்க்கில் திறக்கப்பட்டது(1819)

– தென்னகம்.காம் செய்தி குழு