Current Affairs – 3 July 2018
தமிழகம்
1.உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, காவிரியில் தமிழகத்திற்கு ஜூலை மாதத்திற்குரிய நீரை திறந்துவிடுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது.
இந்தியா
1.மக்களவை, மாநில சட்டப் பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து முக்கிய அரசியல் கட்சிகளுடன் சட்ட ஆணையம் அடுத்த வாரம் 2 நாள்கள் ஆலோசனை நடத்தவுள்ளது.
வர்த்தகம்
1.அனில் அகர்வாலின், ‘வேதாந்தா ரிசோர்சஸ்’ நிறுவனம், லண்டன் பங்குச் சந்தையில் இருந்து வெளியேறுகிறது.
2.இந்தாண்டில், இதுவரை இல்லாத அளவிற்கு, ஜூன் மாதத்தில், தயாரிப்பு துறையின் உற்பத்தி வளர்ச்சி, மிக வேகமாக உயர்ந்திருப்பது நிக்கி – மார்க்கிட் நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை தெரிவிக்கின்றது.
3.இந்தியாவின் கடல் உணவு பொருட்கள் ஏற்றுமதி, கடந்த நிதியாண்டில், 21 சதவீதம் அதிகரித்து உள்ளது.
உலகம்
1.தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன், 4 நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியாவுக்கு வரும் 8-ஆம் தேதி வரவிருக்கிறார்.
2.வட அமெரிக்க நாடான மெக்ஸிகோவில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அதிபர் தேர்தலில் இடதுசாரிக் கட்சியான தேசிய மறுவளர்ச்சி கட்சியின் தலைவர் ஆண்ட்ரஸ் மனுவெல் ஒப்ராடோர் வெற்றியடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டு
1. நட்சத்திர வீரர் நெய்மரின் அபார ஆட்டத்தால் மெக்ஸிகோவை 2-0 என வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது பிரேஸில்.பெனால்டி ஷூட்டில் 3-2 என்ற கோல் கணக்கில் டென்மார்க்கை வென்று உலகக்கோப்பை காலிறுதிக்குள் குரோஷிய அணி நுழைந்தது.
2.சர்வதேச கிரிக்கெட் அரங்கில் சிறப்பான சாதனைகள் புரிந்ததற்காக இந்திய முன்னாள் கேப்டன் ராகுல் திராவிட், ஆஸி. முன்னாள் கேப்டன் ரிக்கி பான்டிங் ஆகியோர் ஐசிசி ஹால் ஆப் ஃபேமில் இணைக்கப்பட்டுள்ளனர்.
இன்றைய தினம்
- மியான்மர் பெண்கள் தினம்
- பெலரஸ் விடுதலை தினம்(1944)
- க்யூபெக் நகரம் உருவாக்கப்பட்டது(1608)
- அமெரிக்காவின் முதல் சேமிப்பு வங்கி நியூயார்க்கில் திறக்கப்பட்டது(1819)
–தென்னகம்.காம் செய்தி குழு