தமிழகம்

1.சென்னை, மதுரை, கோவை மாநகரங்களில் விரைவில் மின்சாரப் பேருந்துகள் இயக்கப்படும் என்றார் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்.


இந்தியா

1.சிபிஐ அமைப்பின் புதிய இயக்குநராக, மத்தியப் பிரதேச காவல்துறையின் முன்னாள் இயக்குநர் ஜெனரல் (டி.ஜி.பி.) ரிஷிகுமார் சுக்லா (58) சனிக்கிழமை நியமிக்கப்பட்டார்.


வர்த்தகம்

1.நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஜனவரி 25-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 39,818 கோடி டாலராக (ரூ.27.87 லட்சம் கோடி) அதிகரித்துள்ளது.

2.ரிலையன்ஸ் கம்யூனி கேஷன்ஸ் நிறுவனம், கடனை திரும்ப செலுத்த முடியாததால், திவால் நடவடிக்கையை ஏற்க முடிவு செய்து உள்ளது.


உலகம்

1.அமெரிக்காவுடன் மேற்கொண்டுள்ள அணு ஆயுத ஏவுகணை தடை ஒப்பந்த அமலாக்கத்தை நிறுத்திவைப்பதாக ரஷ்யா சனிக்கிழமை அறிவித்தது.


விளையாட்டு

1.டேவிஸ் கோப்பை தகுதிச் சுற்று ஆட்டத்தில் இந்தியாவை 3-1 என்ற செட் கணக்கில் வென்று இத்தாலி உலக குரூப் பைனல்ஸ் பிரிவுக்கு தகுதி பெற்றது.


ன்றைய தினம்

  • தமிழக முன்னாள் முதல்வர் சி.என்.அண்ணாதுரை இறந்த தினம்(1969)
  • அமெரிக்காவின் முதலாவது காகித நாணயம், மசாசூசெட்சில் அறிமுகப்படுத்தப்பட்டது(1690)
  • வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சி அமைக்கப்பட்டது(1930)
  • அமெரிக்காவின் விடுதலையை ஸ்பெயின் அங்கீகரித்தது(1783)

– தென்னகம்.காம் செய்தி குழு