தமிழகம்

1.வாணியம்பாடி அருகே உள்ள பாலாற்றங்கரையில் கி.பி. 10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கங்காளர் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

2.மதுரையில் வைகை நதியின் புனிதத்தை பாதுகாக்க வலியுறுத்தி அகில பாரத துறவியர் சங்கத்தின் சார்பில் அடுத்தாண்டு வைகைத் திருவிழா 12 நாள்கள் நடத்தப்படவுள்ளது.


இந்தியா

1.இந்தியாவில் 8 முன்னணி தொழில்நுட்பக் கல்வி நிலையங்களில் (ஐஐடி) 36 சதவீத ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. தகவல் உரிமைச் சட்டத்தின் (ஆர்டிஐ) கீழ் இது தொடர்பான தகவல் பெறப்பட்டுள்ளது.

2. இந்திய-அமெரிக்க விமானப்படைகளின் 12 நாள் கூட்டுப் பயிற்சி மேற்கு வங்கத்தில் தொடங்குகிறது.

3.உத்தரப்பிரதேசத்தில் திருமணங்கள் நடத்த 3 மாதங்களுக்கு தடை விதித்து மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

4.இந்தியாவின் புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக சுனில் அரோரா தில்லியில் ஞாயிறன்று பதவி ஏற்றுக் கொண்டார்.

5.பெங்களூருவில் உள்ள ஜவகர்லால் நேரு விஞ்ஞான ஆய்வு மையத்தைச் சேர்ந்த புவியியல் வல்லுநர் சி.பி. ராஜேந்திரன், அகமதாபாத் விண்வெளி ஆய்வு மையத்தை சேர்ந்த கே.எம்.ஸ்ரீஜித் மற்றும் தில்லியின் தேசிய புவியியல் ஆய்வு மையத்தை சேர்ந்த வினீத் கஹலாட் ஆகியோர் தனித்தனியாக மேற்கொண்ட ஆய்வில், இமயமலை பகுதியில் 8.5 என்ற ரிக்டர் அளவிற்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், இதனால் பேராபத்து உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.


வர்த்தகம்

1.டாடா மோட்டார்ஸ் விற்பனை நவம்பரில் 3.8 சதவீதம் குறைந்துள்ளது.


உலகம்

1.பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவது தொடர்பான ஐ.நா. மாநாடு போலந்தில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

2.சீனப் பொருள்கள் மீது அமெரிக்காவும், அமெரிக்கப் பொருள்கள் மீது சீனாவும் கூடுதல் வரி விதிப்பதை 90 நாள்களுக்கு நிறுத்திவைக்க இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்துள்ளன.

3.கருப்புப் பணத்தை மீட்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, சென்னையைச் சேர்ந்த ஒரு நிறுவனம் உள்பட 2 தனியார் நிறுவனங்களைப் பற்றிய விவரங்களை இந்திய அரசுடன் பகிர்ந்து கொள்வதற்கு ஸ்விட்சர்லாந்து அரசு ஒப்புக் கொண்டுள்ளது.

4.தண்டனை பெற்ற சிறைக் கைதிகளை பரஸ்பரம் பரிமாறிக் கொள்வது தொடர்பாக இந்தியா, ஸ்பெயின் இடையே கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தம் அமலுக்கு வந்துள்ளது.


விளையாட்டு

1.மும்பையில் நடைபெற்ற டாடா ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் லக்ஷயா சென் சாம்பியன் பட்டம் வென்றார்.

2.டபிள்யுபிஏ உலக குத்துச்சண்டை ஹெவிவெயிட் சாம்பியன் பட்டத்தை மீண்டும் தக்க வைத்துக்கொண்டார் நடப்பு சாம்பியனான அமெரிக்காவின் டியோன்டே வைல்டர்.

3.உலகக் கோப்பை ஹாக்கி போட்டியின் ஒரு பகுதியாக ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற இந்திய-பெல்ஜிய அணிகள் ஆட்டம் 2-2 என்ற கோல்கணக்கில் டிராவில் முடிவடைந்தது.


ன்றைய தினம்

  • சர்வதேச மாற்றுதிறனாளிகள் தினம்
  • நவீன அஞ்சல் சேவையை கண்டுபிடித்த ரோலண்ட் ஹில் பிறந்த தினம்(1795)
  • இந்தியாவின் முதல் ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத் பிறந்த தினம்(1884)
  • இந்திய-பாகிஸ்தான் போர் ஆரம்பமானது(1971)
  • இந்தியாவின் போபாலில் விஷவாயு கசிவு ஏற்பட்டது(1984)
  • தென்னகம்.காம் செய்தி குழு