தமிழகம்

1.இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில் வழக்கறிஞர்களின் ஆவணங்களை ஆன்லைன் மூலமாக சரிபார்க்கும் திட்டத்தை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குரியன் ஜோசப், ஆர்.பானுமதி, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி ஆகியோர் துவக்கி வைத்தனர்.


இந்தியா

1.இன்போசிஸ் நிறுவனத்தின் புதிய மேலாண் இயக்குனர் மற்றும் தலைமைச் செயல் இயக்குனராக சாலில் எஸ் பாரீக் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
2.உத்தரப்பிரதேசம் மாநில தலைநகரான லக்னோ நகரின் முதல் பெண் மேயராக பா.ஜ.க.வை சேர்ந்த சன்யுக்தா பாட்டியா என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
3.இந்தியா-பிரிட்டன் ராணுவத்திற்கு இடையேயான கூட்டுப்பயிற்சி ‘அஜெய வாரியர் – 2017’ ராஜஸ்தான் மாநிலம் மகாஜனில் தொடங்கியுள்ளது.


உலகம்

1.உயிர்கொல்லியான எய்ட்ஸ் நோயால் பாதித்தவர்கள் அதிகம் வாழும் நாடுகளில் இந்தியா மூன்றாம் இடத்தில் உள்ளது.


வர்த்தகம்

1.கார் தயாரிப்பில் முன்னணியில் உள்ள ஜப்பானைச் சேர்ந்த நிசான் மோட்டார் நிறுவனம், இந்தியா மீது சர்வதேச தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. மாநில அரசு அளிக்க வேண்டிய ஊக்க தொகை 77 கோடி டாலர் நிலுவைத் தொகையை வழங்க உத்தரவிடுமாறு சர்வதேச தீர்ப்பாயத்தை நிசான் நிறுவனம் நாடியுள்ளது.


விளையாட்டு

1.ஜெர்மனி நாட்டின் அல்டன்பெர்க் நகரின் நடைபெற்ற ஆசிய லூஜ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த சிவ கேசவன் நான்காவது முறையாக தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.


இன்றைய தினம்

1.இன்று சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம் (International Day of Disabled Persons).
மனித சமூகத்தில் காது கேளாதவர், கண் தெரியாதவர், வாய் பேச முடியாதவர், கை கால்களைப் பயன்படுத்த இயலாதவர்கள், மன நோயாளிகள் அனைவரையுமே ஊனமுற்றோர் என்பதற்குப் பதிலாக, மாற்றுத் திறனாளிகள் என்று அழைக்கின்ற முறை 2007ஆம் ஆண்டில் ஐ.நா. சபையில் கொண்டுவரப்பட்டது. 2012ஆம் ஆண்டுமுதல் டிசம்பர் 3ஆம் நாள் உலக மாற்றுத் திறனாளிகள் தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.

 

–தென்னகம்.காம் செய்தி குழு