தமிழகம்

1.வேலூர் மக்களவைத் தேர்தலுக்கான பிரசாரம் சனிக்கிழமை (ஆக. 3) மாலையுடன் ஓய்கிறது. இதையொட்டி, தேர்தல் ஆணையம் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.


இந்தியா

1.அயோத்தி சர்ச்சைக்குரிய நில விவகாரம் தொடர்பான வழக்கில் வரும் 6-ஆம் தேதி முதல் தினசரி விசாரணை நடத்தவுள்ளதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

2.அனைத்து தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியத்தை உறுதி செய்யும் ஊதியங்கள் சட்ட மசோதா, மாநிலங்களவையில் நிறைவேறியது.

3.மக்களவையில் ஜாலியன் வாலாபாக் தேசிய நினைவிட சட்டத் திருத்த மசோதா கடும் எதிர்ப்புக்கு இடையே நிறைவேற்றப்பட்டது.

4.தனி நபர்களைப் பயங்கரவாதியாக அடையாளம் கண்டு அவரது சொத்துகளைப் பறிமுதல் செய்தவற்காக மத்திய, மாநில அரசுகளுக்கு அதிகாரம் அளிக்கும் சட்டவிரோதச் செயல்கள் தடுப்புச் சட்டத் திருத்த (யுஏபிஏ) மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.

5.நாட்டில் உள்ள முக்கிய அணைகளை கண்காணிப்பது, பராமரிப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான அமைப்புகளை ஏற்படுத்த வகைசெய்யும் அணை பாதுகாப்பு மசோதா மக்களவையில் நிறைவேறியது.

6.பயன்பாட்டில் இல்லாத 58 பழைய சட்டங்களை நீக்குவதற்கு வகை செய்யும் மசோதாவுக்கு நாடாளுமன்றம் வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்தது.

7.விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்ட சந்திரயான்-2 விண்கலத்தை, புவி சுற்றுவட்டப் பாதையில் நான்காவது நிலை உயர்த்தும் பணியையும் இந்திய விண்வெளி ஆய்வு மைய (இஸ்ரோ) விஞ்ஞானிகள் பிற்பகலில் வெற்றிகரமாக நிகழ்த்தினர்.

8.ஆசியாவின் நோபல் விருது என்று கருதப்படும் ரமோன் மகசேசே விருதுக்கு இந்திய ஊடகவியலாளர் ரவீஷ் குமார் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவருடன் சேர்த்து மேலும் 4 பேரும் இந்த விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.


வர்த்தகம்

1.இந்தியாவில் வழக்கமான வங்கி சேவைகளை மேற்கொள்ள பேங்க் ஆஃப் சீனாவுக்கு ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது.

2.கடந்த ஜூலை மாதத்தில், நாட்டின், மொத்த ஜி.எஸ்.டி., வசூல், 1.02 லட்சம் கோடி ரூபாய் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.கடந்த ஆண்டு, ஜூலை மாதத்துடன் ஒப்பிடும்போது, 5.8 சதவீதம் அளவுக்கு, வரி வசூல் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில், மொத்தம், 96 ஆயிரத்து, 483 கோடி ரூபாய் வசூல் ஆகியிருந்தது.

3.நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகியின் வாகன விற்பனை சென்ற ஜூலை மாதத்தில் 33.5 சதவீதம் குறைந்து 1,09,264-ஆக இருந்தது.
கடந்த 2018-ஆம் ஆண்டு இதேகாலகட்டத்தில் விற்பனை 1,64,369-ஆக காணப்பட்டது.

4.நாட்டின் மிகப்பெரிய பொதுத் துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி முதல் காலாண்டில் ரூ.2,312 கோடி லாபம் ஈட்டியுள்ளது.

5.பொதுத் துறையைச் சேர்ந்த யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா தனிப்பட்ட வகையில் முதல் காலாண்டில் ரூ.224.43 கோடி லாபம் ஈட்டியுள்ளது.

6.உள்நாட்டைச் சேர்ந்த டாடா மோட்டார்ஸ் சென்ற ஜூலை மாதத்தில் 32,938 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே கால அளவில் விற்பனையான 50,100 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் 34 சதவீதம் குறைவாகும்.


உலகம்

1.பனிப் போர் காலத்தில் நடுத்தர தொலைவு ஏவுகணைகளின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவதற்காக அமெரிக்காவும், ரஷ்யாவும் மேற்கொண்ட ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக அந்த இரு நாடுகளும் அறிவித்தன.

2.30,000 கோடி டாலர் (ரூ.21 லட்சம் கோடி) மதிப்பிலான சீனப் பொருள்கள் மீது கூடுதல் வரி விதிக்க திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

3.ஆண்களின் ஒப்புதல் இன்றி சவூதி அரேபிய பெண்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதற்கு அந்த நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது.


விளையாட்டு

1.ஏடிபி வாஷிங்டன் ஓபன் போட்டி காலிறுதிச் சுற்றுக்கு முன்னணி வீரர் சிட்ஸிபாஸ் முன்னேறியுள்ளார்.

2.ரஷ்யாவில் நடைபெற்று வரும் மகோமத் சலாம் உம்கனோவ் சர்வதேச குத்துச்சண்டை போட்டி இறுதிச் சுற்றுக்கு இந்தியாவின் நீரஜ் முன்னேறினார். ஆடவர் அரையிறுதிக்கு கெளரவ் சோலங்கி, கோவிந்த் சஹானி ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.

3.தாய்லாந்து ஓபன் பாட்மிண்டன் போட்டி ஆடவர் இரட்டையர் அரையிறுதிச் சுற்றுக்கு இந்தியாவின் சத்விக்ரங்கிரெட்டி-சிராக் ஷெட்டி இணை முன்னேறியுள்ளது.


ன்றைய தினம்

  • வெனிசுலா கொடி நாள்
  • காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது(1976)
  • தேசிய கூடைப்பந்து சங்கம் அமெரிக்காவில் அமைக்கப்பட்டது(1949)
  • அமெரிக்காவின் முதல் கப்பலான லெ கிரிஃபோன், ராபர்ட் லசால் என்பவரால் அமைக்கப்பட்டது(1678)

– தென்னகம்.காம் செய்தி குழு