Current Affairs – 3 August 2018
தமிழகம்
1.தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தமிழ் வளர் மையம், அலாகாபாத் பன்மொழி அமைப்புடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டது.
2.திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ., ஏ.கே.போஸ் (அதிமுக) மறைவால் சட்டப் பேரவையில் காலியிடங்களின் எண்ணிக்கை 19-ஆக உயர்ந்துள்ளது.
இந்தியா
1.தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு அரசமைப்பு அந்தஸ்து வழங்க வகைசெய்யும் சட்டமசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
2.ஒடிஸா மாநிலம், பாலாசோரில் உள்நாட்டிலேயே மேம்படுத்தப்பட்ட சூப்பர்சோனிக் இடைமறி ஏவுகணை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.
3.தமிழக முன்னாள் ஆளுநரும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சருமான பீஷ்ம நாராயண் சிங் காலமானார்.
வர்த்தகம்
1.பொதுத் துறையைச் சேர்ந்த எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல், டீசல் ஆகியவற்றின், ‘டிஜிட்டல்’ பணப் பரிவர்த்தனைக்கு அளித்து வந்த சலுகையை, 0.75 சதவீதத்தில் இருந்து, 0.25 சதவீதமாக குறைத்துள்ளன.
உலகம்
1.தனது வர்த்தக நடவடிக்கைகளை சீனா திருத்திக் கொள்ளாவிட்டால் அந்த நாட்டிலிருந்து இறக்குமதியாகும் 20,000 கோடி டாலர் (சுமார் ரூ.13.7 லட்சம் கோடி) மதிப்பிலான பொருள்கள் மீது வரி அதிகரிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
விளையாட்டு
1.உலகக் கோப்பை மகளிர் ஹாக்கி போட்டியில் 3-1 என பெனால்டி ஷூட் அவுட்டில் இந்தியாவை வென்று அயர்லாந்து அணி அரையிறுதிக்கு முன்னேறியது.
இன்றைய தினம்
- வெனிசுலா கொடி நாள்
- காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது(1976)
- தேசிய கூடைப்பந்து சங்கம் அமெரிக்காவில் அமைக்கப்பட்டது(1949)
- அமெரிக்காவின் முதல் கப்பலான லெ கிரிஃபோன், ராபர்ட் லசால் என்பவரால் அமைக்கப்பட்டது(1678)
–தென்னகம்.காம் செய்தி குழு