Current Affairs – 3 April 2019
தமிழகம்
1.பொதுமக்கள் பயன்படுத்தும் போக்குவரத்து வாகனங்களான பேருந்து, ஷேர் ஆட்டோக்களில் அதிகமான பயணிகளை ஏற்றிச் செல்வதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியா
1.அருணாசலப் பிரதேசத்தில் 32 ஆண்டுகளாக அமலில் இருந்து வரும் ஆயுதப் படை சிறப்பு அதிகாரங்கள் சட்டத்தை, 3 மாவட்டங்களில் திரும்பப் பெறுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
2.சிந்து நதியின் மீது 260 அடி நீளமுள்ள தொங்கு பாலத்தை இந்திய ராணுவத்தினர் 40 நாட்களில் அமைத்து சாதனை படைத்துள்ளனர்.
வர்த்தகம்
1.இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை நடைபெறும் ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை குறித்த 3 நாள் கூட்டம் செவ்வாய்க்கிழமை மும்பையில் தொடங்கியது.
ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் நிதி கொள்கை குழுவில் (எம்பிசி) அங்கம் வகிக்கும் ஆறு உறுப்பினர்களும் கலந்து கொண்டுள்ளனர்.
உலகம்
1.அகதிகள் விவகாரத்தை கவனித்து வரும் பல்வேறு அமெரிக்க அரசுத் துறைகளின் நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் அதிகாரம் படைத்த புதிய பதவியை உருவாக்குவது குறித்து அதிபர் டொனால்ட் டிரம்ப் பரிசீலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2.வெனிசூலா நாடாளுமன்றத் தலைவரும், அந்த நாட்டின் இடைக்கால அதிபராக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டவருமான ஜுவான் குவாய்டோவுக்கான சட்டப் பாதுகாப்பை விலக்க அந்த நாட்டு உச்சநீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.
விளையாட்டு
1.இந்திய கோ-கோ கூட்டமைப்பு சார்பில் முதன்முறையாக அல்டிமேட் கோ-கோ என்ற பெயரில் தொழில்முறை லீக் போட்டிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
இன்றைய தினம்
- உலகின் முதலாவது நகர்பேசி அழைப்பு நியூயார்க் நகரில் மேற்கொள்ளப்பட்டது(1973)
- மராட்டிய பேரரசர் சிவாஜி இறந்த தினம் (1680)
- ஃபுரூரியின் முதல் பார்லிமென்ட் உருவாக்கப்பட்டது(1077)
- வெளிநாட்டில் தஞ்சமடைந்திருந்த விளாடிமிர் லெனின் ரஷ்யா திரும்பினார்(1917)
– தென்னகம்.காம் செய்தி குழு