தமிழகம்

1. சென்னையில் நடைபெற்ற விழாவில் 644 காவலர்களுக்கு முதல்வர் பதக்கத்தை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விசுவநாதன் வழங்கினார்.தமிழக காவல்துறையில் பணிக்கு சேர்ந்து 10 ஆண்டுகளுக்கு மேலாக எந்தவித தண்டனையும் பெறாமல், சிறப்பாகப் பணிபுரியும் காவலர்களுக்கு தமிழக முதல்வர் காவல் பதக்கம் வழங்கப்படுகிறது.

2.விவசாயிகளுக்கான தத்கல் மின் திட்டத்தின் கீழ் மின் இணைப்பு பெறுவதற்கு வரும் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக மின்துறை அமைச்சர் அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.


இந்தியா

1.நாட்டிலுள்ள 5,000 ரயில் நிலையங்களில் இலவச வை-ஃபை வசதியை ரயில்வே நிர்வாகம் வெற்றிகரமாக ஏற்படுத்தியுள்ளது.

2.மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நீலகிரி போர்க்கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த போர்க்கப்பல் திட்டம் 17ஏ இன் மூலம் தயாரான முதல் கப்பலாகும்.


வர்த்தகம்

1.நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு செப்டம்பர் 20-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 42,857 கோடி டாலராக (ரூ.30 லட்சம் கோடி) குறைந்துள்ளது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

2.இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி அமெரிக்காவிலிருந்து 72 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது.

3.பாரத்– 22 இ.டி.எப்., திட்டத்தின், நான்காம் கட்ட வெளியீட்டை, அக்டோபர் 3ல் மேற்கொள்ள உள்ளது.


உலகம்

1.புதிய இரத்த பரிசோதனை மூலம் பல வகையான புற்றுநோய்களை துல்லியமாகக் கண்டறியலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.உயிரி தொழில்நுட்ப நிறுவனமான கிரெயில் இன்க் உருவாக்கிய இந்த பரிசோதனையில், மரபணுக்கள் செயலில் உள்ளதா அல்லது செயலற்று உள்ளதா என்பதைக் கண்டறியும் சிறிய வேதியியல் முறையில் மரபணுவை ஆய்வு செய்யும் தொழில்நுட்பத்தின் அடுத்த தலைமுறை பயன்படுத்தப்பட்டுள்ளது.


விளையாட்டு

1.வுஹான் ஓபன் டென்னிஸ் போட்டியில் நடப்பு சாம்பியன் ஆர்யனா சபலென்கா பட்டத்தை தக்க வைத்துக் கொண்டார்.

2.கொரிய ஓபன் பாட்மிண்டன் அரையிறுதிச் சுற்றில் இந்திய வீரர் பாருபல்லி காஷ்யப் தோல்வியடைந்தார்.

3.ஸ்பெயினுக்கு எதிரான ஹாக்கி போட்டியில் ஆடவர் இந்திய அணி 6-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.


ன்றைய தினம்

  • உலக இதய தினம்
  • சர்வதேச காபி தினம்
  • அர்ஜெண்டீனா கண்டுபிடிப்பாளர்கள் தினம்
  • ஓமன், அரபுக் கூட்டமைப்பில் இணைந்தது(1971)
  • ஜான் ரொக்பெல்லர், உலகின் முதலாவது கோடீஸ்வரர் ஆனார்(1916)
  • கனடாவின் முதல் செயற்கைகோளான அலூட் 1 ஏவப்பட்டது(1962)

– தென்னகம்.காம் செய்தி குழு