தமிழகம்

1.ஆன்லைனில் மருந்துகள் விற்பனை செய்யக் கூடாது என வலியுறுத்தி தமிழகம் முழுவதும் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருந்துக் கடைகள்  மூடப்பட்டன.

2.புதுச்சேரியில் விரைவில் ரூ.200 கோடியில் இஎஸ்ஐ உயர்தர சிறப்பு (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) மருத்துவமனை அமைக்கப்படும் என்று மத்திய தொழிலாளர் துறை இணை அமைச்சர் சந்தோஷ்குமார் கங்குவார் தெரிவித்தார்.


இந்தியா

1.கேரளத்தில் உள்ள  சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று உச்ச நீதிமன்ற அரசியல்சாசன அமர்வு  தீர்ப்பளித்தது.

2.இந்திய நாளிதழ் சங்கத்தின் (ஐஎன்எஸ்) புதிய தலைவராக “மலையாள மனோரமா’ பத்திரிகையின் நிர்வாக ஆசிரியர் ஜெயந்த் மாமன் மேத்யூ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

3.பெங்களூரு மாநகராட்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேர்தலில் மேயராக காங்கிரûஸ சேர்ந்த கங்காம்பிகே , துணை மேயராக மதச் சார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த ரமீலா வெற்றி பெற்றனர்.

4.வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்தின் மறுகட்டமைப்புக்காக சிறப்பு வரி விதிப்பது குறித்து ஆய்வு செய்ய ஏழு அமைச்சர்கள் கொண்ட குழு அமைத்து மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி உத்தரவிட்டுள்ளார்.


வர்த்தகம்

1.இந்தியாவின் புதிய வேளாண் ஏற்றுமதி கொள்கைக்கு இன்னும் சில தினங்களில் அமைச்சரவை ஒப்புதல் அளிக்கும் என வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு  தெரிவித்தார்.

2.பந்தன் வங்கி, புதிய கிளைகளை திறப்பதற்கான அனுமதியை ரிசர்வ் வங்கி நிறுத்தி வைத்துள்ளது.


உலகம்

1.மியான்மர் அரசின் தலைவர் ஆங் சான் சூகிக்கு கனடா அளித்திருந்த கெளரவ குடியுரிமையை பறிப்பதற்கான தீர்மானத்தை அந்த நாட்டு நாடாளுமன்றம் ஒருமனதாக நிறைவேற்றியுள்ளது.

2.இந்தோனேஷியாவின் மையப் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கமும், அதனைத் தொடர்ந்து சுனாமியும் ஏற்பட்டது.


விளையாட்டு

1.வங்கதேச அணியை  3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியஅணி 7-ஆவது முறையாக ஆசிய கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்றது.

2.இந்தியாவில்  ஐஎஸ்எல் லீக் சீசன் 2018-19 போட்டிகள்  கொல்கத்தாவில் தொடங்குகிறது.


ன்றைய தினம்

  • உலக இதய தினம்
  • சர்வதேச காபி தினம்
  • அர்ஜெண்டீனா கண்டுபிடிப்பாளர்கள் தினம்
  • ஓமன், அரபுக் கூட்டமைப்பில் இணைந்தது(1971)
  • ஜான் ரொக்பெல்லர், உலகின் முதலாவது கோடீஸ்வரர் ஆனார்(1916)
  • கனடாவின் முதல் செயற்கைகோளான அலூட் 1 ஏவப்பட்டது(1962)
  • தென்னகம்.காம் செய்தி குழு