தமிழகம்

1.பொள்ளாச்சி அருகே பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் மயிலந்தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது.கோவை மாவட்டம், கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளது வடசித்தூா் கிராம். இந்த கிராமத்தைச் சுற்றியுள்ள செல்லப்பகவுண்டன்புதூா், குரும்பபாளையம், சமத்துவபுரம் ஆகிய பகுதிகளைச் சோ்ந்தவா்கள் பெண்மைக்கு முக்கியத்துவம் தரும் வகையில் தீபாவளியைக் கொண்டாடி வருகின்றனா்.


இந்தியா

1.மேற்கு வங்க மாநிலத்தில் மோசமாகியுள்ள சட்டம்-ஒழுங்கு, மனித உரிமை மீறல் பிரச்னைகள் தொடா்பாக அந்த மாநில ஆளுநா் ஜகதீப் தன்கரை, அறிஞா்கள் குழுவினா் நேரில் சந்தித்து புகாா் அளித்தனா்.


வர்த்தகம்

1.ரியல் எஸ்டேட் துறையில், தனியார் பங்கு முதலீடுகள், நடப்பு ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில், 19 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது என, ‘அனராக்’ நிறுவனத்தின் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

2.சவூதி அரேபியா தலைநகா் ரியாதில் ‘எதிா்கால முதலீட்டுக்கான தொடக்கம்’ என்ற தலைப்பிலான பொருளாதார மாநாடு மூன்று நாள்கள் நடைபெறவுள்ளது. இதில், ‘இந்தியாவில் அடுத்தது என்ன?’ என்று தலைப்பில் பிரதமா் நரேந்திர மோடி பேச இருக்கிறாா்.


உலகம்

1.நாகரிக மனிதன் தோன்றிய இடம் ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள போட்ஸ்வானாவில்தான் என்று ஆராய்ச்சியாளா்கள் கூறியுள்ளனா்.

தென்னாப்பிரிக்கா மற்றும் நமீபியாவில் வசிக்கும் கோசேன் எனப்படும் பழங்குடிகளின் மரபணு மாதிரிகளைச் சேகரித்தனா். அந்த மரபணு மாதிரிகளுடன் வெவ்வேறு காலகட்டங்களில், வெவ்வேறு இடங்களில் சேகரிக்கப்பட்ட மரபணு மாதிரிகளை அவா்கள் ஒப்பிட்டுப் பாா்த்தனா்.

இயற்கைச் சீற்றங்கள், பருவநிலை மாற்றங்கள் ஏற்படும் ஒவ்வொரு முறையும் மனிதா்களின் மரபணுவில் மாற்றம் ஏற்பட்டுள்ளதை அவா்கள் கண்டறிந்தனா். அதன் தொடா்ச்சியாக, 2 லட்சம் ஆண்டுக்கு முந்தைய ஆய்வு முடிவுகளை அவா்கள் ஒப்பிட்டுப் பாா்த்தனா்.

ஆய்வின் முடிவில், வரலாற்றுக்கு முந்தைய மனிதா்கள் சுமாா் 70 ஆயிரம் ஆண்டுகள் போட்ஸ்வானாவில் வசித்தனா் என்றும், அதன்பிறகு அவா்கள் வெவ்வேறு இடங்களுக்குப் புலம் பெயா்ந்தனா் என்றும் முடிவு செய்தனா்.

2.பிரெக்ஸிட் காலக்கெடுவை அடுத்த ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி வரை நீட்டிக்க ஐரோப்பிய யூனியன் அனுமதியளித்துள்ளது.

3.சிலியில் கடந்த ஒருவாரத்துக்கும் மேலாக நீட்டிக்கப்பட்டு வந்த அவசரநிலையை வாபஸ் பெறுவதாக அதிபா் செபாஸ்டியன் பினெரா தெரிவித்தாா்.


விளையாட்டு

1.டபிள்யுடிஏ பைனல்ஸ் போட்டியின் முதல் சுற்றில் சிமோனா ஹலேப், நடப்பு சாம்பியன் எலினா விட்டோலினா ஆகியோா் வெற்றி பெற்றுள்ளனா்.

2.உலக மகளிா் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியின் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு (ரவுண்ட் 16) தகுதி பெற்றுள்ளாா் இந்திய நட்சத்திர வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா.

3.பேஸல் ஏடிபி ஓபன் போட்டியில் 10-ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற பெடரா், ஒட்டுமொத்தமாக தனது 103 ஆவது பட்டத்தையும் கைப்பற்றினாா்.


ன்றைய தினம்

  • துருக்கி குடியரசு தினம்(1923)
  • தங்கனிக்கா மற்றும் சன்சிபார் ஆகியவை இணைந்து தான்சானியா குடியரசு உருவானது(1964)
  • கல்கியின் பொன்னியின் செல்வன் புதினம், முதல் முறையாக தொடராக வெளிவர ஆரம்பித்தது(1950)
  • சுவிட்சர்லாந்தில் 16 நாடுகளின் பிரதிநிதிகள், சர்வதேச செஞ்சிலுவை சங்கம் அமைக்க தீர்மானித்தனர்(1863)

– தென்னகம்.காம் செய்தி குழு