தமிழகம்

1.திருநெல்வேலி, திருச்சி உள்பட 4 இடங்களில் உள்ள அரசு அருங்காட்சியகங்களை ரூ. 12 கோடி மதிப்பில் உலகத் தரத்துக்கு உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார் மாநில தொல்லியல் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன்.


இந்தியா

1.கனடா தலைநகர் ஒட்டாவா, ரஷியாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க், ஜெர்மனியின் மியூனிக் உள்பட மேலும் 8 நகரங்களிலுள்ள இந்திய தூதரகங்களில் சுற்றுலாப் பயணிகளுக்கான இணைய வழி நுழைவு இசைவு (இ-விசா) சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

2.நிதியமைச்சர் அருண் ஜேட்லி தலைமையிலான ஜிஎஸ்டி கவுன்சில், கடந்த 2 ஆண்டுகளில் 30 முறை கூடி சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) சட்டம் குறித்து 918 முடிவுகளை எடுத்துள்ளதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.


வர்த்தகம்

1.உலகளவில் கார் விற்பனையில் இந்தியா நான்காவது மிகப் பெரிய சந்தையாக உள்ளது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மோட்டார் வாகன துறை 7.1 சதவீத பங்களிப்பை வழங்கி வருகிறது.


உலகம்

1.குழப்பம் நீடித்து வரும் இலங்கை அரசியலில் புதிய திருப்பமாக, அதிபர் மைத்ரிபால சிறீசேனாவால் பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்க அந்த நாட்டின் பிரதமராகத் தொடர்வதற்கு நாடாளுமன்றத் தலைவர் கரு ஜெயசூர்யா அங்கீகாரம் வழங்கியுள்ளார்.

2.மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் நான்கு நாள் அரசு முறைப் பயணமாக கத்தார் புறப்பட்டுச் சென்றார்.


விளையாட்டு

1.சீனாவில் நடைபெற்ற நான்னிங் ஐடிஎப் டென்னிஸ் போட்டியில் இந்திய வீராங்கனை கர்மன் கெளர் இரண்டாம் இடம் பெற்றார்.

2.சிங்கப்பூரில் நடைபெற்ற மகளிர் டபிள்யுடிஏ பைனல்ஸ் இறுதி ஆட்டத்தில் உக்ரைன் வீராங்கனை எலினா விட்டோலினா சாம்பியன் பட்டம் வென்றார்.


ன்றைய தினம்

  • துருக்கி குடியரசு தினம்(1923)
  • தங்கனிக்கா மற்றும் சன்சிபார் ஆகியவை இணைந்து தான்சானியா குடியரசு உருவானது(1964)
  • கல்கியின் பொன்னியின் செல்வன் புதினம், முதல் முறையாக தொடராக வெளிவர ஆரம்பித்தது(1950)
  • சுவிட்சர்லாந்தில் 16 நாடுகளின் பிரதிநிதிகள், சர்வதேச செஞ்சிலுவை சங்கம் அமைக்க தீர்மானித்தனர்(1863)
  • தென்னகம்.காம் செய்தி குழு