தமிழகம்

1.என்.எல்.சி. இந்தியா நிறுவன சுரங்கத் துறை இயக்குநராக பிரபாகர் சவுக்கி புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.

2.திருப்பத்தூர் அருகே கி.பி. 15-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சதிக்கல் கண்டெடுக்கப்பட்டது.

3.முத்தொரை பாலடாவிலுள்ள 62 ஆண்டுகள் பழமையான மத்திய உருளைக்கிழங்கு ஆராய்ச்சி மையத்தை மூட மத்திய அரசு முடிவுசெய்துள்ளது.


இந்தியா

1.மத்தியப் பிரதேச மாநிலத்தில் புதன்கிழமை நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் 75 சதவீத வாக்குகள் பதிவாகின.

2. ஊழல் கண்காணிப்பு ஆணைய அலுவலகத்தில், சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானாவுக்கு எதிரான வழக்கின் ஆவணங்களை ஆய்வு செய்வதற்கு சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா, இணை இயக்குநர் ஏ.கே.சர்மா ஆகியோருக்கு தில்லி உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

3.மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (யுபிஎஸ்சி) தலைவராக அரவிந்த் சக்சேனா நியமிக்கப்பட்டுள்ளார்.

4.போதிய தொகை இருப்பில் இருந்தும், குறைந்தபட்ச ரீசார்ஜ் செய்யாத செல்லிடப்பேசி வாடிக்கையாளர்கள் எண்ணுக்கான சேவையை உடனடியாக துண்டிக்கக் கூடாது என்று தொலைத் தொடர்பு சேவை அளிக்கும் நிறுவனங்களுக்கு டிராய் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.


வர்த்தகம்

1.கடந்த ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான காலத்தில் கோல்டு எக்சேஞ்ச்-டிரேடட் பண்ட்ஸ் எனப்படும் தங்க இ.டி.எஃப். திட்டங்களிலிருந்து ரூ. 290 கோடி வெளியேறியுள்ளது.

2.முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசின் பொருளாதார வளர்ச்சி குறித்த புள்ளி விவரங்களை இப்போதைய மத்திய அரசு திருத்தி வெளியிட்டுள்ளது.கடந்த 2010-11-ஆம் ஆண்டு மன்மோகன் சிங் தலைமையிலான அரசில் பொருளாதார வளர்ச்சி விகிதம் 10.3 சதவீதமாக இருந்தது என்று முன்பு கூறப்பட்டிருந்தது. ஆனால், இப்போது அது 8.5 சதவீதமாக திருத்தப்பட்டுள்ளது. அதேபோல 2008-09-ஆம் ஆண்டு வளர்ச்சி விகிதம் 3.9 சதவீதமாக இருந்ததாக கூறப்பட்டிருந்தது. இப்போது அது 3.1 சதவீதமாக திருத்தி வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் 2008-09 முதல் 2012-13 வரையிலான காலகட்டத்தில் சராசரி பொருளாதார வளர்ச்சி 6 சதவீதம் என்று திருத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பாஜக கூட்டணி ஆட்சியின் கடந்த 5 ஆண்டுகளில் 7.12 சதவீதமாக பொருளாதார வளர்ச்சி இருந்தது என்று கூறப்பட்டுள்ளது.


உலகம்

1.ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஆர்ஜென்டீனாவுக்கு சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே ஆகியோருடன் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

2.அமெரிக்கா-சீனா இடையே நிலையான வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுவதற்கு, சீனாவுக்கு 4 நிபந்தனைகளை வெள்ளை மாளிகை விதித்துள்ளது.

3.பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் உள்ள ஈஃபில் கோபுரத்தில் பயன்படுத்திய எஃகு படிக்கட்டின் ஒரு பகுதியை மத்திய கிழக்கு நாட்டைச் சேர்ந்த ஒருவர் ரூ.1.35 கோடிக்கு ஏலத்தில் வாங்கியுள்ளார்.


விளையாட்டு

1.உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவை 5-0 என்ற கோல் கணக்கில் வென்று,  தொடங்கியுள்ளது.

2.தென் கொரியாவில் நடைபெறும் கொரிய ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் காஷ்யப், செளரவ் வர்மா ஆகியோர்  தோற்று வெளியேறினர்.

3.செஸ் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பட்டத்தை வெல்வதற்காக நார்வேயின் மேக்னஸ் கார்ல்சென்-அமெரிக்காவின் ஃபாபியானோ கருணா இடையே நடைபெற்ற இறுதி ஆட்டங்கள் தொடர்ந்து சமனானதை அடுத்து, புதன்கிழமை இருவரும் ரேபிட் டைபிரேக் ஆட்டத்தில் களம் காண்கின்றனர். செஸ் உலக சாம்பியன்ஷிப்பில் இவ்வாறு நிகழ்வது இது முதல் முறையாகும்.


ன்றைய தினம்

  • தமிழ் நகைச்சுவை நடிகர் என்.எஸ்.கிருஷ்ணன் பிறந்த தினம்(1908)
  • இந்திய தொழிலதிபர் ஜே.ஆர்.டி.டாடா இறந்த தினம்(1993)
  • தாமஸ் ஆல்வா எடிசன், போனோகிராஃப் என்ற ஒலிப்பதிவுக் கருவியை முதல் தடவையாக காட்சிப்படுத்தினர்(1877)
  • பாலஸ்தீனத்தைப் பிரிப்பதென ஐநா முடிவெடுத்தது(1947)
  • தென்னகம்.காம் செய்தி குழு