Current Affairs – 29 November 2017
தமிழகம்
1.சென்னை உயர் நீதிமன்றத்துக்கு விரைவில் 6 புதிய நீதிபதிகள் நியமிக்கப்பட உள்ளனர்.
2..தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை பட்டமளிப்பு விழாவில், 67 வயது மூதாட்டி செல்லத்தாய், எம்.ஏ. வரலாறு பட்டம் பெற்றார்.
இந்தியா
1.பாதுகாப்புத் துறையின் உற்பத்திப் பிரிவுச் செயலராக, அஜய் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
தில்லி தலைமைச் செயலர் எம்.எம். குட்டி, மத்திய நிதியமைச்சக இணைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தேசிய ஆவணக் காப்பகத்தின் பொது இயக்குநராக உள்ள ராகவேந்திர சிங் கலாசாரத் துறைச் செயராக நியமனம் பெற்றுள்ளார்.
நிறுவனங்கள் விவகாரத் துறை இணைச் செயலர் பிரீதம் சிங், தேசிய ஆவணக் காப்பக பொது இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்
2.ஏர் இந்தியா நிறுவனத்தின் புதிய தலைவராக ஐ.ஏ.எஸ். அதிகாரி பிரதீப் சிங் கரோலா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
3.மக்களவைச் செயலராக சினேகலதா ஸ்ரீவாஸ்தவா நியமிக்கப்பட்டுள்ளார்.மக்களவையின் முதல் பெண் செயலர் சினேகலதா ஸ்ரீவாஸ்தவா என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம்
1.தென் கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவின் பாலி தீவில் உள்ள, மவுன்ட் அகுங் எரிமலை, 54 ஆண்டுகளுக்கு பின், வெடித்துச் சிதறியது.
வர்த்தகம்
1.பெண் தொழில் முனைவோரின் கைவினைப் பொருட்களை விற்பனை செய்ய, அமேசான் இந்தியா வலைதளத்தில், தனி பிரிவு துவக்கப்பட்டு உள்ளது.
2.இணைய சமநிலை பயன்பாட்டிற்கு(Net Neutrality), தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான, டிராய்(TRAI) ஆதரவு தெரிவித்து, மத்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொடர்பு துறை அமைச்சகத்திற்கு அறிக்கை அளித்து உள்ளது.
3.ஹுண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் கார் உற்பத்தி 50 லட்சத்தை தாண்டி சாதனை படைத்துள்ளது.
விளையாட்டு
1.கத்தாரில் நடந்த ஸ்னுாக்கர் சாம்பியன்ஷிப் தொடரில், இந்திய வீரர் பங்கஜ் அத்வானி கோப்பை வென்றார். உலக சாம்பியன்ஷிப்பில் இவர் வென்ற 18வது கோப்பை இது.
இன்றைய தினம்
1.1877 – தாமஸ் அல்வா எடிசன் போனோகிராஃப் என்ற ஒலிப்பதிவுக் கருவியைக் முதற்தடவையாகக் காட்சிப்படுத்தினார்.
–தென்னகம்.காம் செய்தி குழு