தமிழகம்

1.தமிழகத்துக்கு 9.19 டிஎம்சி நீரை காவிரியில் இருந்து கர்நாடகம் திறந்துவிட வேண்டும் என்று காவிரி நீர் மேலாண்மை ஆணையம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.

2.மாணவர் சேர்க்கை இல்லாத காரணத்தால் தமிழகத்தில் 9 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் உள்பட 89 பொறியியல் கல்லூரிகள் பி.இ., எம்.இ. உள்ளிட்ட 188 முதுநிலை, இளநிலை பொறியியல் படிப்புகளைக் கைவிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.


இந்தியா

1.நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி வியாழக்கிழமை (மே 30) பதவியேற்கவுள்ள நிலையில், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க அனைத்து மாநில ஆளுநர்கள், முதல்வர்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள், முன்னாள் குடியரசுத் தலைவர்கள், முன்னாள் பிரதமர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது தவிர பல்வேறு பிராந்தியக் கட்சிகளின் தலைவர்கள், தேசியக் கட்சிகளின் மாநிலத் தலைவர்கள், துறை சார்ந்த பிரபலங்கள், திரைப்பட நட்சத்திரங்கள் என பலதரப்பட்ட பிரமுகர்களுக்கும் அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

2.மிஸோரம் மாநிலத்தில் நான்கு ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

3.புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சிவசேனை எம்.பி.க்கள் அனைவரும் மராத்தி மொழியில் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொள்வார்கள் என அக்கட்சி தெரிவித்துள்ளது.


வர்த்தகம்

1.அந்நிய நேரடி முதலீடு, ஆறு ஆண்டுகளில் முதல் முறையாக சென்ற நிதியாண்டில் சரிவைக் கண்டுள்ளது.கடந்த 2018-19-ஆம் நிதியாண்டில் 4,437 கோடி டாலர் மதிப்பிலான ( இந்திய மதிப்பில் ரூ.3.10 லட்சம் கோடி) அந்நிய நேரடி முதலீடு இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டது.
இதற்கு முந்தைய 2017-18 நிதியாண்டில் மேற்கொள்ளப்பட்ட அந்நிய நேரடி முதலீடான 4,485 கோடி டாலருடன் ஒப்பிடும்போது இது 1 சதவீதம் குறைவாகும்.


உலகம்

1.இந்தியா-பாகிஸ்தான் இடையேயான கர்தார்பூர் வழித்தட திட்டத்தின் செயலாக்கம் குறித்து இரு நாட்டு அதிகாரிகளும்  ஆலோசனை நடத்தினர்.


விளையாட்டு

1.ஒடிசா மாநிலம் புவனேசுவரத்தில் ஜூன் மாதம் நடைபெறவுள்ள எஃப்ஐஎச் ஹாக்கி சீரிஸ் பைனலுக்கான இந்திய அணியில் ரமண்தீப் சிங் மீண்டும் அணியில் இடம் பெற்றுள்ளார்.
2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறும் வகையில் இப்போட்டிகள் ஜூன் 6-ஆம் தேதி தொடங்குகிறது.

2.கோவையில் நாச்சிமுத்து கவுண்டர் கோப்பைக்கான 54-ஆவது ஆடவர் கூடைப்பந்து போட்டிகளும், சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் கோப்பைக்கான 18-ஆவது மகளிர் கூடைப்பந்து போட்டிகளும் நடைபெற்று வருகின்றன. இதில் 2-ஆவது நாள் ஆட்டங்களில் ஆடவர் பிரிவில் இந்திய கடற்படை, பரோடா வங்கி அணிகளும், மகளிர் பிரிவில் தென் மத்திய ரயில்வே, கேரள மின்வாரிய அணிகளும் வெற்றி பெற்றுள்ளன.


ன்றைய தினம்

  • உலக தம்பதியர் தினம்
  • சர்வதேச அமைதி காப்போர் தினம்
  • நைஜீரியா மக்களாட்சி தினம்(1999)
  • இந்திய தரக்கட்டுப்பாட்டு நிறுவனம் அமைக்கப்பட்டது(1947)
  • ஆஸ்திரிய-ஹங்கேரி பேரரசு அமைக்கப்பட்டது(1867)

– தென்னகம்.காம் செய்தி குழு