தமிழகம்

1.விதிகளை மீறியது தொடர்பாக, திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் மீது வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.


இந்தியா

1.நாடாளுமன்ற மக்களவை எம்.பி.க்களில் 83 சதவீதம் பேர் கோடீஸ்வரர்கள் என்றும், 33 சதவீதம் பேருக்கு எதிராக குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன என்றும் அசோசியேஷன் ஃபார் டெமாக்ரேட்டிக் ரிஃபார்ம்ஸ் (ஏடிஆர்) என்ற தன்னார்வ அமைப்பின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

2.இந்தியாவில் அடுத்த மக்கள்தொகை கணக்கெடுப்பு பணி வரும் 2021-ஆம் ஆண்டு மார்ச் 1-ஆம் தேதி தொடங்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

3.கோவாவில், மாநில சுற்றுலாத் துறை அமைச்சரான மனோகர் ஆஜ்கான்கர் வியாழக்கிழமை துணை முதல்வராக நியமிக்கப்பட்டார்.


வர்த்தகம்

1.சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் லாரி, பேருந்துகளுக்கான டயர்கள் மீது மிகை இறக்குமதி வரி விதிக்க வேண்டும் என்று மத்திய நிதியமைச்சகத்துக்கு, வர்த்தகத் துறை அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.

2.நடப்பு நிதியாண்டிற்கான நேரடி வரி வருவாய், இலக்கை விட குறையும் நிலை உருவானதை அடுத்து, வசூல் நடவடிக்கையை தீவிரப்படுத்துமாறு, வருமான வரி அதிகாரிகளுக்கு, மத்திய நேரடி வரிகள் வாரியம் உத்தரவிட்டு உள்ளது.

3.பங்குச் சந்தை பட்டியலில் உள்ள நிறுவனங்களின் காகித ஆவண பங்குகளை மாற்றுவது, ‘டீமேட்’ எனப்படும் மின்னணு ஆவண நடைமுறையில் மட்டுமே மேற்கொள்ளப்படும்’ என, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான, ‘செபி’ அறிவித்து உள்ளது.

4.தமிழ்நாடு வணிகவரி துறையின் செயல்பாடுகள் முழுவதையும், ஆன்லைனுக்கு மாற்றும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


உலகம்

1.ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அஸாரை, சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கக் கோரும் வரைவு தீர்மானத்தை, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உறுப்பு நாடுகளிடம் அமெரிக்கா வழங்கியுள்ளது.

2.தாய்லாந்தில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ராணுவ ஆதரவுக் கட்சி வெற்றி பெற்றதாக அந்த நாட்டு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

3.உலகின் மிக நீளமானதாக கணக்கிடப்பட்டுள்ள உப்புப் படிம குகை, இஸ்ரேலில் கண்டறியப்பட்டுள்ளது. மால்ஹாம் என பெயிரிடப்பட்டுள்ள அந்த குகை, 10 கிலோ மீட்டருக்கும் அதிகமான நீளம் கொண்டதாகும்.
இதற்கு முன்பாக, ஈரானின் தெற்குப் பகுதியில் காஷெம் தீவில் உள்ள 3என் என்ற குகையே உலகின் மிக நீளமான உப்புப் படிம குகையாக அறியப்பட்டிருந்தது.


விளையாட்டு

1.இந்தியா ஓபன் பாட்மிண்டன் போட்டி காலிறுதிச் சுற்றுக்கு சாய் பிரணீத், பாருபல்லி காஷ்யப் ஆகியோர் முன்னேறி உள்ளனர்.

2.மியாமி ஓபன் டென்னிஸ் மகளிர் பிரிவு அரையிறுதிக்கு சிமோனா ஹலேப் தகுதி பெற்றுள்ளார். ஆடவர் ஒற்றையர் காலிறுதியில் பெடரர்-கெவின் ஆண்டர்சன் மோதுகின்றனர்.

3.தைவானில் நடைபெற்று வரும் ஆசிய ஏர்கன் சாம்பியன்ஷிப் பேஜ்ட்டியில் இந்தியாவின் ஷிரேயா அகர்வால்-யஷ் வர்த்தன் தங்கப்பதக்கம் வென்றனர்.
10 மீ ஏர் ரைபிள் கலப்பு அணி ஜூனியர் பிரிவு இறுதியில் ஷிரேயா அகர்வால்-யஷ் வர்த்தன் 497.3 புள்ளிகள் குவித்து தங்கம் வென்றனர். மற்றொரு இந்திய இணையான மெஹுலி கோஷ்-கேவல்பிரஜாபதி 496.9 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கம் வென்றனர்.

4.இந்திய ஆடவர் ஹாக்கி அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஆஸி. முன்னாள் வீரர் கிரஹாம் ரீட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


ன்றைய தினம்

  • தாய்வான் இளைஞர் தினம்
  • அயர்லாந்து, புகைப்பிடித்தலை பணியிடங்களில் தடை செய்த முதல் நாடானது(2004)
  • பூமி மணித்தியாலம், அனைத்துலக மயமாக்கப்பட்டது(2008)
  • யாஹூவின் 360 டிகிரி சேவை ஆரம்பிக்கப்பட்டது(2005)

– தென்னகம்.காம் செய்தி குழு