தமிழகம்

1.சட்டப்பேரவைத் தலைவர் ப.தனபால் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை வலியுறுத்தப் போவதில்லை என்று எதிர்க்கட்சித் தலைவரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

2.தமிழகத்தில் கூடுதலாக 2 பல்கலைக்கழகங்கள் தொலைநிலைப் படிப்புகளை வழங்க பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அனுமதி அளித்துள்ளது.
அதன்படி, மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் மற்றும் மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம் உள்பட 10 பல்கலைக்கழகங்களின் சார்பில் வழங்கப்படும் தொலைநிலைப் படிப்புகள் செல்லும் என்ற நிலை உருவாகியிருக்கிறது.


இந்தியா

1.அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிப்பதற்கான தேர்தல் நிதிப் பத்திரங்களின் விற்பனை ஜூலை 1 முதல் 10-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. தேர்தல் நிதிப் பத்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு இப்போது 11-ஆவது கட்டமாக விற்பனை நடைபெறவுள்ளது.

2.ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கிய இந்திய மருத்துவ கவுன்சிலை (எம்சிஐ), மருத்துவர்களைக் கொண்ட குழு நிர்வகிப்பதற்கு அனுமதிக்கும் மசோதா, மக்களவையில் மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டது.

3.புதிய இடஒதுக்கீட்டின் அடிப்படையில் உயர் கல்வி நிறுவனங்களில் நேரடியாக 7,000 ஆசிரியர்களை நியமிக்க வகை செய்யும் மத்திய கல்வி மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.


வர்த்தகம்

1.நாட்டின் நிதிப் பற்றாக்குறை நடப்பு நிதியாண்டின் முதல் இரண்டு மாதங்களிலேயே 52 சதவீதத்தை எட்டியுள்ளது.

2.இந்தியாவில் கடந்த ஐந்து ஆண்டுகளில் சீனா 181 கோடி டாலர் முதலீடு செய்துள்ளதாக நாடாளுமன்றத்தில்  தெரிவிக்கப்பட்டது.


உலகம்

1.இந்தியா உள்ளிட்ட பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த உலகின் 19 நாடுகள் மற்றும் ஐரோப்பிய யூனியன் அங்கம் வகிக்கும் ஜி20 அமைப்பின் 14-ஆவது மாநாடு, ஜப்பானிலுள்ள ஒசாகா நகரில்  நடைபெறுகிறது.

2.பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங், ரஷிய அதிபர் விளாதிமிர் புதின் ஆகியோர் ஜப்பானின் ஒசாகா நகரில்  சந்தித்துப் பேசினர்.

3.சனிக் கிரகத்தை சுற்றி வரும் 62 நிலவுகளில் மிகப் பெரிய நிலவான டைட்டனில், ஆளில்லா விமானம் மூலம் ஆய்வு மேற்கொள்ள நாசா திட்டமிட்டுள்ளது.
இதற்காக, டைட்டன் நிலவின் பல்வேறு பகுதிகளில் பறந்தும், தரையிறங்கியும் ஆய்வு செய்வதற்கான டிராகன்ஃப்ளை என்ற ஆளில்லா விமானத்தை நாசா விஞ்ஞானிகள் உருவாக்கி வருகின்றனர்.
85 கோடி டாலர் (சுமார் ரூ.5,850 கோடி) செலவில் மேற்கொள்ளப்படவிருக்கும் இந்த ஆய்வுத் திட்டத்தின்கீழ், ராக்கெட் மூலம் டிராகன்ஃப்ளை ஆய்வு விமானம் வரும் 2026-ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்டு, 2034-ஆம் ஆண்டு டைட்டன் நிலவில் தரையிறங்கும்.

4.நீர்முழ்கிக் கப்பலில் இருந்து ஏவக் கூடிய புதிய ஜேஎல்-3 ரக ஏவுகணையை சீனா வெற்றிகரமாக பரிசோதித்தது.


விளையாட்டு

1.இந்திய தேசிய கார் பந்தய சாம்பியன் போட்டி சென்னை அடுத்த இருங்காட்டுக்கோட்டையில் உள்ள மோட்டார் வாகன பந்தய மைதானத்தில்  தொடங்கியது.

2.பிஃபா மகளிர் உலகக் கோப்பை அரையிறுதிச் சுற்றுக்கு இங்கிலாந்து அணி முன்னேறியுள்ளது.


ன்றைய தினம்

  • செஷெல் விடுதலை தினம்(1976)
  • வான்கூவர் தீவில் நிலக்கரி கண்டுபிடிக்கப்பட்டது(1850)
  • பிரின்ஸ் எட்வர்ட் தீவு, ஜாக் கார்ட்டியர் என்ற ஐரோப்பியரால் கண்டுபிடிக்கப்பட்டது(1534)
  • அட்லாண்டஸ் விண்ணோடம், ரஷ்யாவின் மீர் விண்வெளி நிலையத்துடன் முதல் முறையாக இணைந்தது(1995)

– தென்னகம்.காம் செய்தி குழு